Home  |  அறுசுவை

மருந்து சோறு (Marunthu Rice)

தேவையானவை :

 

புழுங்கல் அரிசி -அரை கிலோ

மருந்து பொடி -2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்

கரம்மசாலா - அரை ஸ்பூன்

பூண்டு- 15 பல்

கருவேப்பிலை,மல்லி,புதினா- சிறிது

நல்லெண்ணய் - 100மில்லி

நெய்- 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம்- 100கிராம்

பச்சை மிளகாய் -3

தேங்காய்பால் - 1 கப்

கருப்பட்டி - 50கிராம் 

உளுந்து - ஒரு பிடி

முட்டை-1

உப்பு-தேவைக்கு

 

செய்முறை :

 

1.முதலில் வெங்காயம்,மல்லி,புதினா நறுக்கி வைக்கவும்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா ரெடி செய்யவும். ஒரு கைபிடியளவு உளுந்து மற்றும் அரிசியை நன்கு அலசி ஊறவைக்கவும்

 

2.ஒரு முட்டையை அடித்து வைக்கவும்.கருப்பட்டியை பாகு எடுத்து கொள்ளவும்.மருந்து பொடியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.பால் திக்காக இருப்பது நல்லது.ஒரு சிலர் முந்திரி பருப்பும் தேங்காயுடன் அரைத்து விடுவது உண்டு.

 

3.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் இரண்டும் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு, கரம் மசாலா வதக்கவும்,அத்துடன் உரித்த பூண்டு பல்லை சேர்க்கவும்,மல்லி,கருவேப்பிலை,புதினா சேர்த்து வதக்கவும்.பின்பு கரைத்து வைத்த மருந்து பொடியை சேர்த்து அடுப்பை மிதமன் தீயில்  வைத்து மூடி பத்து நிமிடம் வேக வைக்கவும்.பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும்.

 

4.தேங்காய்பாலை அரிசியின் அளவிற்கு இரண்டு மடங்கு எடுத்து கொள்ளவும்.அதனுடன் உளுந்து சேர்த்து வேக வைக்கவும்.தேங்காய்ப்பால் நுரை கூடி வரும் பொழுது அரிசியை நன்றக கலக்கவும்,பிறகு உப்பு போடவும்.மிதமான தீயில் வைத்து மூடவும்.

 

5.சோறு நன்கு வெந்து மேல் வரும் பொழுது அடித்த முட்டை,கருப்பட்டி பாகு  விட்டு சோறு குழையாதவாறு பிரட்டவும்.அதை மூடி போட்டு பத்து நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.பிறகு இறக்கி நான்கு களறி விட்டு பரிமாறவும்.

Marunthu Rice

Ingredients for Marunthu Rice:

 

Rice-1/2 Kg

Marunthu Rice-2 Tbsp

Ginger, Garlic Paste-3 Tsp

Garam Masala-1/2 Tsp

Garlic-15 Flakes

Curry Leaves, Coriadner, Mint-Little

Sesame oil-100 Ml

Ghee-2 Tbsp

Onion-100 G

Green Chilly-3

Coconut Milk-1 Cup

Karupatti-50 G

Black Gram-Hand Pinch

Egg-1

Salt-as Needed

 

Procedure to make Marunthu Rice:

 

1. Chop the onion, tomato and mint. Wash the black gram and rice and let to soak well.

2. Beat the egg and set aside. Boil the karupatti and mix the marunthu powder in 1 cup of water. Grind cashew nuts along with coconut.

3. In a vessel, add oil, ghee and let to boil. Then add onion, ginger, garlic paste and garam masala. Then add garlic flakes. Add coriander, curry leaves, mint and fry well. Then add marundhu powder and allow medium flame for 10 minutes. Now add green chilies.

4. Take coconut milk and allow to boil along with black gram. When foam starts, add rice and salt. Allow medium flame and cover the vessel.

5. When rice boiled well, add beated egg, karupatti and stir well. Cover the vessel and let to boil for 10 minutes. Remove from flame and serve it.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!