பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் அற்புதம்மாள் முடிவு செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன். இதையடுத்து அவருக்கு ஒரு மாத காலம் பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடத்துவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர். அவரது தாயார் அற்புதம்மாள் பெண்பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
|