Home  |  திரை உலகம்

ரீமேக் ஆகிறது சிகப்பு ரோஜாக்கள் !!

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் - சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தை ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.


சிகப்பு ரோஜாக்கள் படம் ரீ-மேக் ஆவது தற்போது உறுதி ஆகி உள்ளது. சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கை தற்போது இயக்கவிருப்பது யார் தெரியுமா, பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தான்! 


பாரதிராஜா, மணிரத்னம் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள மனோஜ் பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.


பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதி, தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம் உட்பட பல படங்களில் நடித்தார். ஒரு படமும் அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. தற்போது வாய்மை, 13, கதிர்வேல் காக்க ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம் மனோஜ் பாரதி. 


இப்படங்களை முடித்த உடனே, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீ-மேக்கை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு சிகப்பு ரோஜாக்கள் என்ற பெயர் பழைய பெயரையே வைக்காமல் சிவப்பு ரோஜா என்று புதுமையான பெயரை வைத்துள்ளார். இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர். 


பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்