Home  |  திரை உலகம்

மஞ்சப்பை ( Manjapai )

மஞ்சப்பை ( Manjapai )

Movie Name: Manjapai மஞ்சப்பை
Hero: VIMAL
Heroine: LAKSHMI MENON
Year: 2014
Movie Director: Naveen Raghavan
Movie Producer: THIRUPATHI BROTHERS
Music By: N. R. Raghunanthan


சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்த விமலை, வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குகிறார் தாத்தா ராஜ்கிரண். பெரியவனாகும் விமல், சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார். அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்ட விமலுக்கு, அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்குள் அமெரிக்கா போகவிருக்கும் அவர், தன்னை வளர்த்து ஆளாக்கிய ராஜ்கிரணை அதுவரை தன்னுடன் சென்னையில் வைத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறார். தாத்தாவையும் வரவழைக்கிறார்.

கிராமத்து மனிதரான தாத்தா, தன் ஊரில் நடந்து கொள்வதைப் போலவே சென்னை நகரிலும், குடியிருக்கும் அபார்ட்மெண்டிலும் நடந்து கொள்ள அக்கம் பக்கத்தவர்கள் ஏகத்துக்கும் புகார். விமலின் வேலைக்கும், அமெரிக்கா போகும் கனவும், லட்சுமி மேனனுடனான காதலும் கூட தாத்தாவின் நடவடிக்கையால் சோதனைக்கு, அந்த நேரம் பார்த்து அந்த அபார்ட்மென்டில், இவர் ஏற்படுத்திய உணவுப் பழக்கத்தால், எலி மருந்தைத் தின்றுவிடுகிறது ஒரு குழந்தை. அவர்களும் ராஜ்கிரணைத் திட்டி, ராஜ்கிரண் காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ். ஆனால் சடாரென்று அந்த காவல் அதிகாரியின் கன்னத்தைப் பதம் பார்க்கும் காட்சியிலும், எச்சில் கையால் காக்காய் ஓட்டாத பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடல் நலமில்லாத போது அருகிலிருந்து கவனித்துக் கொள்வதும், விக்ரமன் பாணியாக இருந்தாலும், மனசு ரசிக்கிறது! ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு அசர வைக்கிறது.

கலைஞனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது இயக்குநர்கள் கையிலிருக்கிறது.ராஜ்கிரண் இப்படி நடித்துத் தீர்க்க, விமல் எப்போதும் மாதிரியே வருவதும், லட்சுமி மேனனுக்கும் அவருக்குமான சுவாரஸ்யமற்ற காதலும் படத்தை முழுமைபெறாத சித்திரமாக்கிவிட்டன. காட்சியமைப்பில் ஒரு சீரியல்தனம் இருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். பாராட்டத்தக்க விஷயம், படத்தின் எந்தக் காட்சியிலும் வன்முறையோ ஆபாசமோ இல்லை என்பது. லட்சுமி மேனனுக்கு வழக்கமான பாத்திரம்தான்.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விவேகம் படத்தில் அஜித் எழுதிய ஒரு மரண மாஸ் காட்சி..! – செம்ம அப்டேட்..!
நண்பனின் துரோகம்தான் விவேகம்! முழு கதையும் இதோ!
மெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்! ரொம்ப துணிச்சல்தான் விஜய்க்கு!
ஆரவ் மீது BiggBoss எடுத்த அதிரடி முடிவு- நடந்தது என்ன?
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்