Home  |  அறுசுவை

சுவையான மாங்காய் குழம்பு !!

சுவையான மாங்காய் குழம்பு !!

தேவையான பொருட்கள் விபரம் :

மாங்காய் - 1
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

 

சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - 4 தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி


தக்காளி - பாதி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி


கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


மாங்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து,
மற்றும் கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.


இதில் நறுக்கின வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து சிறிது லேசாக பிரட்டவும்.


பிறகு இதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கடைசியாக மல்லி இலையை தூவி இரக்கவும்.

இப்போது  மணக்க மணக்க மாங்காய் குழம்பு ரெடி!!

  11 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!