Home  |  அறுசுவை

மாங்காய் மீன் குழம்பு (Mango Fish Curry)

தேவையானவை;

 

மீன் - அரை கிலோ

மாங்காய் - 1

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

பச்சை மிளகாய் -2

இஞ்சி - சிறியதுண்டு

பூண்டு - 6 பல்

கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது

புளி - சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 3 டீஸ்பூன்

சீரகத்தூள் - கால்ஸ்பூன்

மிளகுத்தூள் - கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்

 

செய்முறை :

 

1.முதலில்  சுத்தம் செய்து கழுவிய மீனை  மஞ்சள் உப்பு போட்டு அலசி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு,மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளி ஊறவைக்கவும்.தேங்காய் அரைத்து கொள்ளவும்.

2.கடையில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்,தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடவும்,நன்கு மசிந்து விடும்,அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கி மணம் வரும்போது மீனை போடவும்.

3.மீனை சேர்த்த பிறகு சிறிது கொதி வரும்போது நறுக்கிய மாங்காய் சேர்க்கவும்.மாங்காயும் மீனும் வெந்து வரும்.அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.நன்கு கொதிவரவும் அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் மேல் வரவும் குழம்பு ரெடி. விரும்பினால் மல்லி இலை தூவி இறக்கவும்.

Mango Fish Curry

Ingredients for Mango Fish Curry:

 

Fish-1/2 Kg

Mango-1

Small Onion-15

Tomato-2

Green Chilly-2

Ginger-Small Piece

Garlic-6 Flakes

Curry Leaves, Coriander Leaves-Little

Tamarind-Small Lemon Size

Oil-4 Tbsp

Mustard-1/2 Tsp

Fenugreek-1/2 Tsp

Salt-as Needed

Chilly Powder-1 1/2 Tsp

Coriander Powder-3 Tsp

Cumin Powder-1/4 Tsp

Pepper Powder-1/4 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Coconut Milk-1 Small Cup

 

Procedure to make Mango Fish Curry:

 

1. Wash the fish, mix along with turmeric powder and salt and clean it. Chop finely the onion, tomato, ginger, garlic and coriander leaves. Slice a small mango in to pieces. Marinate the tamarind in water. Grind the coconut.

2. Heat oil in a pan, add mustard, fenugreek, curry leaves and let to splutter. Then add onion, ginger and garlic and saute them. Add tomato, green chilies and salt and then cover the pan for a while. Then add chilly powder, coriander powder, cumin powder, pepper powder and fry for few minutes and then add tamarind juice and allow to boil well. When the raw smell subsides, then add fish.

3. When starts boiling, add sliced mango pieces. When mango and fish cooked well, add grinded paste. Allow medium flame till the oil floats on top and remove from flame. Finally garnish with coriander leaves and serve it.

 

 

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!