Home  |  திரை உலகம்

மாலினி 22 பாளையங்கோட்டை ( Malini 22 Palayamkottai )

மாலினி 22 பாளையங்கோட்டை ( Malini 22 Palayamkottai  )

Movie Name: Malini 22 Palayamkottai மாலினி 22 பாளையங்கோட்டை
Hero: Krish J. Sathaar
Heroine: Nithya Menen
Year: 2014
Movie Director: Sri Priya
Movie Producer: Rajkumar Theatres
Music By: Aravind Shankar

பாளையங்கோட்டையில் பிறந்து சென்னையில் செவிலிப் பெண்ணாகப் பணியாற்றும் 22 வயது பெண் மாலினியின் (நித்யா மேனன்) கனவு கனடாவில் சென்று பணியாற்றுவது. விசா பெற்றுத் தரும் பொறுப்பில் உள்ள வருண் கார்த்திகேயனும் (கிருஷ். ஜே. சதார்) மாலினியும் காதலிக்கிறார்கள். வருணுக்கு ஏற்படும் ஒரு நெருக்கடியால் இவர்கள் வாழ்வில் குறுக்கிடும் வருணின் முதலாளி பிரகாஷ் (நவீன்) மாலினியை மிருகத்தனமாகத் தாக்கி அவளுடன் பாலியல் வல்லுறவு கொள்கிறான். காதலனின் துணையுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள மாலினி போராடிக்கொண்டிருக்கும்போதே அந்தக் குற்றம் மீண்டும் ஒரு முறை நிகழ்கிறது. மாலினியின் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றமும் சுமத்தப்பட்டு அவள் சிறைக்குச் செல்ல, தனக்கு நடந்த அனைத்திலும் வருணுக்கும் பங்கு இருக்கிறது என்பது மாலினிக்குத் தெரியவருகிறது. வருணின் துரோகத்துக்கும் பிரகாஷின் மிருகத்தனத்துக்கும் தக்க தண்டனை வழங்க அவள் முடிவுசெய்கிறாள்.மாலினி பழிவாங்கினாளா..? என்பதுதான் மீதிக்கதை.

நடிகை ப்ரியா இயக்கியுள்ள இந்தப் படம் உச்சக் காட்சியும் அதில் மாலினி பேசும் வசனங்களும். பாலியல் வல்லுறவு பற்றிப் பேசும்போதெல்லாம் பெண்களின் நடை, உடை, பாவனை, நடத்தை ஆகியவற்றைக் குறைகூறும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. பாலியல் குற்றத்துக்கு மரணமும் ஆண்மை நீக்கமும் சரியான தண்டனையகுமா என்பது குறித்து விவாதம் நடைபெற்றுவரும் சூழலில், பழிவாங்குதலை ஆதரிக்கும் இந்தப் படம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் நின்று பேசுகிறது. பன்னெடுங்காலமாய் நடப்பதுதான் என்றாலும் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்கள் அதிகரித்துள்ளன. என்றாலும் அத்தகைய குற்றங்கள் குறைவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் நூதனமான பாலியல் வன்முறை குறித்தும் பாதிக்கப்பட்ட பெண் படும் அவதிகள் குறித்தும் இந்தப் படம் நம் கவனத்தைக் கோருகிறது.

சீரழிக்கப் பட்டு, அவமானப்படுத்தப் படும் பெண் மையின் கோபம் பொங்கி எழுந்தால் என்ன ஆகும் என்னும் சாத்தியக் கூறையும் அழுத்தமாக முன்வைக்கிறது. நித்யா மேனன் சிறப்பாக நடித்துள்ளார். காதல், பயம், மிரட்சி, கோபம் ஆகிய அனைத்தையும் அவரது விழிகளே காட்டிவிடுகின்றன. வருணின் வீட்டில் நித்யா தங்குவது, இரண்டாம் முறை பாலியல் வன்முறை நிகழுவது ஆகியவற்றுக் கான பின்னணிகள் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. திரைக்கதையில் பழிவாங்குவதற்கு இருக்கும் முக்கியத் துவம் விழிப்புணர்வூட்டுவதற்கு இல்லை. பாலியல் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் எப்படி கிடைத்தது?

பின்னணி இசையும் கைகொர்க்கவில்லை,,,
பாலியலுக்கு எதிரான ஒரு புரட்சி மட்டுமே....!



  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை