Home  |  அறுசுவை

கண்ணா லட்டு தின்ன ஆசையா !!

கண்ணா லட்டு தின்ன ஆசையா !!

லட்டு செய்வது எப்படி என்பதை இப்போது பார்போம்.

கடலை மாவு - 1 1/2 கப்
அஸ்கா - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் - 10
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - அரை லிட்டர்

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்  படுத்தி வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும்.


கடலை மாவில் மஞ்சள் கலர் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றி பூந்தியை பொரித்து எடுக்கவும்.


பிறகு வேறு ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போட்டு தாளித்து பூந்தியில் போட்டு கிளறவும்.
இவை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு அரைத்தெடுக்கவும்.


வாணலியில் பூந்தியை போட்டு லேசான சூட்டில் வறுக்கவும். பின் இதில் சீனி பாகை ஊற்றி உருண்டை பிடிக்கவும்.
சுவையான பூந்தி லட்டு ரெடி.

விடுமுறையில் வீட்டில் உள்ள மாணவர்களுக்கு இந்த பீம் லட்டு செய்து கொடுத்து அசத்துங்கள்.

Making method of laddu
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!