Home  |  திரை உலகம்

ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டில் மேஜர் முகுந்த் குடும்பத்தை பெருமைப்படுத்திய அர்ஜுன் !!

நடிகர் அர்ஜுன் தற்போது, ஜெய்ஹிந்த்-2 என்ற படத்தயை இயக்கி நடித்து வருகிறார். 


இன்றைய கல்வி முறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார்.


விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்த விழாவில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, சமீபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை அழைத்து கவுரவித்தார் அர்ஜூன். 


ஜெய்ஹிந்த்-2 படத்தின் இசையை, முகுந்த்தின் மகள் ஆர்சியாவும், ஜெய்ஹிந்த்-2வில் நடித்துள்ள குழந்தை யுவியும் வெளியிட்டனர்.


ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் :


இதனை தொடர்ந்து பேசிய அர்ஜுன், நான் முதலில் நான் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன், எனது அப்பா சம்மதம் சொல்லிவிட்டார், ஆனால் என் அம்மா சம்மதிக்கவில்லை.இதனால் நான் ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது. 


ராணுவத்திற்கு போய் இருந்தால் கண்டிப்பாக சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன். அதனால் நான் சினிமாவில் நடிக்கும்போது, அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும்போது என்னையும் அறியாமல் அதிக ஈடுபாட்டுடன் நடித்து விடுகிறேன். 


சினிமாவில் நாட்டுப்பற்று உடைய படங்களில் நடிக்கும்போது, ஒரு ஹீரோவாக இல்லாமல் உண்மையான நாட்டுப்பற்று உடைய நபராக நடிக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் நாட்டுப்பற்று அவசியம் இருக்க வேண்டும். இதுவரை நான் 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். என்னுள் எப்போதும் நாட்டுப்பற்று இருந்து கொண்டே இருக்கிறது. 


ஜெய்ஹிந்த் படத்திற்கும் ஜெய்ஹிந்த்-2 படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய கல்விமுறை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். 


குறிப்பாக ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வரவேண்டும் என இந்த படத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கிறோம்.


ஜெய்ஹிந்த்-2 படத்தின் இசை வெளியீடு விழாவிற்கு உண்மையான ரியல் ஹீரோவை அழைத்து வர எண்ணினோம். அதன்படி மேஜர் முகுந்த் குடும்பத்தாரிடம், இதுதொடர்பாக பேசி அவர்களை இங்கு வரவழைத்துள்ளோம். இந்த விழாவில் அவர்கள் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 


எல்லையில் நாட்டை காப்பாற்றுபவர்கள் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் மக்களை காப்பாற்றுபவர்களும் ரியல் ஹீரோக்கள் தான் என உணர்ச்சி பொங்க பேசினார் அர்ஜுன். 


முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் :


இந்த விழாவில், இயக்குனர் பாலா பேசும் போது,


இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு, அர்ஜூன் சார் என்னை அழைத்தபோது, விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தார் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னார், இதனையடுத்து நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் வர சம்மதம் சொன்னேன். 


இதுவரை நான் எந்த ஒரு நடிகர், நடிகையருடனோ அல்லது வேறு சினிமாக்காரர்கள் உடனோ போட்டோ எடுக்க ஆசைப்பட்டதில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் போட்டோ எடுத்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி போட்டோ எடுத்து கொண்டார் இயக்குனர் பாலா.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்