Home  |  திரை உலகம்

மெட்ராஸ் படத்திற்கு - எவிடென்ஸ் அமைப்பின் விருது !!

அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி, கேத்ரினா தெரசா நடித்த மெட்ராஸ் திரைப்படம், கடந்த ஜூலை 25 ம் தேதி வெளியாகி இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.


வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எவிடென்ஸ் என்ற அமைப்பு சமூக மாற்றத்துக்கான படைப்பு என்ற விருதை அறிவித்துள்ளது.


பல்வேறு சமூக பிரச்னைகளை கையிலெடுத்து போராடி வரும் எவிடென்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் சமூக மாற்றத்துக்காக போராடும் படைப்பாளிகளுக்கு விருது வழங்கியும் கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.


மெட்ராஸ் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அப்பாவி இளைஞர்களை அரசியல்வாதிகள் எப்படி தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சென்னையின் அடித்தட்டு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த படம் எங்கள் அமைப்பின் பிரச்சார கருவியாக இருப்பதால் இந்த ஆண்டு சமூக மாற்றத்துக்கான படைப்பு விருதை மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கு வழங்குகிறோம். 


வருகிற 25ந் தேதி மதுரையில் நடக்கும் விழாவில் விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படும் என்று எவிடென்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்