Home  |  திரை உலகம்

நாளை வெளியாக இருக்கும் மெட்ராஸ், ஜீவா ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

மெட்ராஸ், ஜீவா ஆகிய படங்கள் நாளை தமிழக திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. 


இந்த படங்களை பற்றிய சில சுவாரசிய தகவல்கள் பற்றி இங்கு காண்போம். 


மெட்ராஸ் :


அட்டகத்தி பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மெட்ராஸ். இந்த படத்தின் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 


வட சென்னையை மையமாக கொண்ட படம். வடசென்னையின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கார்த்தி அந்த பகுதியில் உள்ள நார்த் இண்டியன் பெண்ணான கேத்ரீனாவை காதலிக்கிறார். அவருக்கு வரும் ஒரு பிரச்னையிலிருந்து அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. 


ஜீவா :


சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்னு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் உருவாக்கி வரும் படம் ஜீவா. 


இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை மையமாக வைத்து படம் எடுத்த சுசீந்திரன் இந்த படத்தில், கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறாராம்.


இந்த படத்தின் கதை : 


கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் உயிராக மாறிவிட்டது. இங்குள்ள எல்லோருக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரனோ, ரசிகனோ இருக்கிறான். துடிப்பான இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார்கள். செலக்ஷன் அரசியலில் அடிப்பட்டு கிரிகெட்டையே மறந்துடுறாங்க. கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியருத்தனோட வலிதான் படம். 50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையை தேடி எங்கே போவான் அதை பேசுகிற படம்.


எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துபோவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்து போறாங்க. அதைத்தான் படம் பேசப்போகுதாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்