Home  |  திரை உலகம்

சூழ்நிலையை சொன்னால் போதும் இனி கம்ப்யூட்டரும் பாட்டெழுதும் !!

இன்றைய தமிழ் சினிமாவில், சிறிய படம், பெரிய படம் என எதுவாக இருந்தாலும், பாடல் எழுதி தரக்கூடிய முன்னணி பாடலாசிரியர்களை விரல் விட்டுதான் எண்ணமுடியும். அந்த வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது, கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கார்க்கி தான். 

 

கண்டேன் காதலை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான மதன் கார்க்கி. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஓடோடி போறேன் என்ற பாடலே இவருடைய முதல் பாடலாகும். எந்திரனில் இவர் எழுதிய "இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ" என்ற பாடல் மக்கள் மத்தியிலும், கவிஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கார்க்கி பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். மதன் கார்க்கி தற்போது பாடலாசிரியர் என்றாலும், அடிப்படையில் அவர் ஒரு கணினி பொறியாளர். அண்ணா பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார்.

 

மதன் கார்க்கி ஏற்கனவே, தனது நிறுவனத்தின் மூலம், தமிழ் அகராதி, ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர், சர்ச் பிலிம் சாங் போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார். தற்போது, ஒரு புதிய பாடல் எழுதும் மென்பொருளை உருவாக்கி இருக்கிறார். 

 

தான் உருவாக்கி இருக்கும் பாடல் எழுதும் மென்பொருள் குறித்து கார்க்கி கூறும் போது, திரைப்பட பாடல்களை பொறுத்த வரை, கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெட்டுக்கு ஏற்ற மாதிரி எழுதப்படுவது. இதற்கு கவிஞனின் உணர்களை விட, சூழ்நிலைகளுக்கு தகுந்த வார்த்தைகளே முக்கியம். அதனை கம்ப்யூட்டர் செய்து விடும். காதல், தீ, பூ, உலகம், காற்று இந்த வார்த்தைகள்தான் பாடலில் அதிகம் பயன்படுத்தப்படும். எந்ததெந்த சூழ்நிலைக்கு எந்த வார்த்தைகள் தேவைப்படும் என்பதை முடிவு செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை பொருத்தினால் அது தொடர்புடைய வார்த்தைகளை இணைத்து பாடலாக தந்துவிடும். சின்ன திருத்தங்களை செய்தால் போதும். பாடல்கள் சில மணி நேரங்களில் ரெடியாகி விடும் என்கிறார் கார்க்கி. எப்படியோ உங்க கம்ப்யூட்டர் பாட்டாலா அட்ரா ட்ரா ட்ரா நக்கு முக்க....நக்கு முக்க....போன்ற பாடல்கள் வராமல் இருந்தால் சரி .....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்