Home  |  திரை உலகம்

மதயானைக் கூட்டம் ( Madha Yaanai Koottam )

மதயானைக் கூட்டம் ( Madha Yaanai Koottam )

Movie Name: Madha Yaanai Koottam மதயானைக் கூட்டம்
Hero: Kathir
Heroine: OVIYA
Year: 2013
Movie Director: Vikram Sugumaran
Movie Producer: JSK Flim Corporation
Music By: N. R. Raghunanthan


சாவு வீட்டின் சடங்குகளைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்குகிறது படம். ஊர்ப் பெரிய மனிதருக்கு இரண்டு மனைவிகள். இரு குடும்பங்களுக்கிடையே இதனால் ஏற்படும் பகைமையும் வன்முறை வெறியாட்டமும்தான் கதை கரு.வறட்டு கவுரவம், வீம்பு, சாவுச் சடங்குகளின்போது ஏற்படும் கடுமையான மனத்தாங்கல்கள், வன்முறையை அந்தச் சமூகம் அணுகும் விதம் ஆகியவை வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாயகனின் அம்மா கொல்லப்படும் காட்சியில் தெறிக்கும் வன்மம் அச்சமூட்டக்கூடியது. வசனங்கள் இயல்பாக உள்ளன. கறுப்பு நிறத்தைக் கேவலப்படுத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான குரலை நாயகன் எழுப்புவது ஆறுதல் அளிக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ரகுநந்தன். பின்னணி இசையிலும் பாடல்களிலும் மண் வாசனை நிறைவாக உள்ளது. நாயகன் கதிர் நன்றாக நடித்திருக்கிறார். அண்ணனாக வரும் வேல ராமமூர்த்தி மிடுக்கான தோற்றமும் சிறப்பான நடிப்புமாக மனதில் நிற்கிறார். கோழைத் தனமாகக் கொலை செய்த பிறகும் தன் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் அவர் கை, மீசையை முறுக்கும் காட்சி அபாரம். ஓவியா மென்மையான பொலிவான தோற்றத்தாலும் பளிச்சிடும் புன்னகை. ரகு தருமனின் ஒளிப்பதிவு குறிப் பிடத்தக்கது. இரவுக் காட்சிகள் இயல்பான வெளிச்சத்தில் தெளிவாகப் படமாக்கப்பட்டுள்ளன.

பிற்போக்குத்தனங்களை விமர்சனப் பார்வை இல்லாமல் அணுகுவதுதான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். சிக்கலான சாதி அமைப்பும் வெவ்வேறு சாதியினருக்கிடையே கவலைக்குரிய உறவுகளும் உள்ள தமிழ்ச் சமூகத்தில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைப் பற்றிக் கவலை ஏற்படுகிறது. சாதிப் பெருமிதத்தை மட்டுமின்றி ‘வீரத்தையும்’ பறைசாற்றுகிறது இப்படம். இது இந்தச் சாதியினரிடமும் பிற சாதியினரிடமும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கட்டமைத்த விதத்திலும் முத்திரை பதிக்கிறார் இயக்குநர். சாதியக் கூறுகளை அப்பட்டமாக முன்வைப்பது, திரைக்கதையின் தொய்வு ஆகியவை பலவீனங்கள்.
யானைகளின் பலம் அறிந்து போருக்கு சென்றுள்ளனர்....

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்