Home  |  ஆன்மிகம்

மாசி மகம் - யோக நாள் !!

மாசி மகம் - யோக நாள் !!


மாசிமகம், மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது.

 

கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர்.

 

கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் மாசி மகத்தில் வருகிறது.
அப்போது சிம்மராசி நாதன் சூரியன் கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம்.
அப்போது மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசிமகமாக திகழ்கிறது.

 

சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 

இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்தால் விசேஷம். அப்படி செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்பட்டு நன்மை கிட்டும்.

 

இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

 

மதியம் ஒரு வேளை உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால், பழம் அருந்தலாம்.

அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் தேவார திருவாசகங்களை பாடிய படி இருக்க வேண்டும்.
இவ்வாறு இறைவனை பூஜித்தால் நன்மைகள் கோடி உண்டாகும்...

  24 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!