Home  |  திரை உலகம்

இறுதிகட்டத்தில் லிங்கா !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. 


அணை கட்டுவதை மையமாக வைத்து உருவாக்கி வரும் இந்த படத்தில், ரஜினிகாந்த் இரண்டு கதாபத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். 


இந்த படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாம். 


கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'டாக்கீ போர்ஷன்' என்று சொல்லக் கூடிய அனைத்து வசனக் காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாம். 


முக்கியமான சில சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் சண்டைக்காட்சி இயக்குனர் லீ விடேகர் தலைமையில் படமாக்கி வருகிறார்கள். அவையும் சில நாட்களில் முடிந்து விடுமாம்.


அதன் பின் ரஜினிகாந்த், ரவிக்குமார் இருவரும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னைக்கு வர உள்ளதால் படப்பிடிப்புக்கு சிறு இடைவெளி விடுகிறார்களாம். 


இதனைத்தொடர்ந்து, பாடல் காட்சிகளைப் படமாக்க ஐரோப்பா செல்வதுடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுகிறது. இதனிடையே படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறதாம்.


'லிங்கா' படத்தின் மூலம் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற வேண்டும் என்று ரஜினிகாந்த் உட்பட படக்குழு குழுவினர் அனைவரும் இடைவிடாது உழைத்து வருகிறார்கள். 'கோச்சடையான்' படத்தால் ரஜினி ரசிகர்கள் முழு திருப்தியடையாததால் 'எந்திரன்' படத்தை விட இன்னும் பெரிய அளவிற்கு 'லிங்கா' படத்தை வெற்றியடைய வைக்க வேண்டும் என நினைக்கிறார்களாம்.


கண்டிப்பாக படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வந்து விடும் என படத்தயாரிப்பு நிர்வாக தெர்வித்துள்ளது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்