Home  |  திரை உலகம்

லிங்கா ரிலீஸ் - நீதிமன்றம் புதிய நிபந்தனை !!

லிங்கா ரிலீஸ் - நீதிமன்றம் புதிய நிபந்தனை !!

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை வெளியிட ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்துள்ளது.
 
'லிங்கா திரைப்படம் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று கூறிய ரவிரத்னம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'லிங்கா' படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரவிரத்தினம் 4 வாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் உத்தரவிட்டது.

மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கான பாதுகாப்பிற்காக ரூபாய் 10 கோடி உத்தரவாதம் அளிக்க 'லிங்கா' பட குழுவினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ரூபாய் 5 கோடியை பணமாகவும், ரூபாய் 5 கோடியை வங்கி உத்தரவாதத்துடன் கட்ட வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும், நாளை மதியம் 12 மணிக்குள் பணத்தை கட்டினால் 'லிங்கா' படத்தை வெளியிட தடையில்லை என்றும் கூறியுள்ளது.

முன்னதாக வைப்புத் தொகை அதிகம் என்ற தயாரிப்பாளர் தரப்பு வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

'திட்டமிட்டபடி லிங்கா'வெளியாகும்'

நீதிமன்றத்தின் மேற்கூறிய உத்தரவால் லிங்கா வெளியீட்டில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

ஆனால் திட்டமிட்டபடி எவ்வித தாமதமும் இல்லாமல்  லிங்கா' வெளியாகும் என்றும்,  நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் மதிப்பதாகவும் தயாரிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

  11 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்