Home  |  திரை உலகம்

இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்த லிங்கா....

இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடித்த லிங்கா....

என்னதான் அடுக்கடுக்காக விமர்சனங்களும், புகார்களும் வரிசையாக வரிந்து கட்டிக்கொண்டு நின்னாலும், ரஜினியின் லிங்கா படம் இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா. தமிழ் சினிமா காணாத அளவுக்கு தமிழகத்தின் மொத்த அரங்குகளில் 90 சதவீதம் லிங்கா மட்டுமே வெளியிடப்பட்டது.

சென்னை தவிர்த்து, சேலம் நகரில் மட்டும் அதிகபட்சமாக 18 அரங்குகளில் வெளியானது இந்தப் படம். கோவை ஏரியாவில் 100 அரங்குகளில் லிங்கா வெளியானது. முதல் மூன்று நாட்களில் உலகமெங்கும் ரூ 104 கோடியை லிங்கா வசூலித்து சாதனைப் படைத்தது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இதுதான் அதிகபட்ச ஆரம்ப வசூல். ஆனால் படம் வெளியான ஆறாவது நாளே, போதிய வசூல் இல்லை, நஷ்டம் என்று கூறி சில விநியோகிஸ்தர்கள் கூறினர்.
 
இந்த நிலையில்தான் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பித்துள்ளது. இப்போது வார நாட்களிலும் கூட்டம் வருவதால் லிங்காவே இரண்டாவது வாரமும் முதலிடத்தில் உள்ளது. வெளியிடப்பட்ட அரங்குகளில் பெரும்பாலானவற்றில் லிங்கா ஓடுகிறது. அதே நேரத்தில் மல்டிப்ளெக்ஸ்களில் சில காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் படத்துக்கு பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என்பது தெளிவாகிறது. படத்துக்கு கூட்டம் வந்தால் மல்டிபிளக்ஸ்களில் காட்சிகளை குறைத்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த வாரத்தில் மட்டும் சுமார் ஆறு திரைப்படங்கள் திரைக்கு வர இருப்பதால், லிங்காவின் வசூலும், தியேட்டர் எண்ணிக்கையும் குறையும் என்கின்றனர் விமர்சகர்கள்.

  22 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்