Home  |  திரை உலகம்

லிங்கா படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா ?

பஞ்ச் டயலாக்குகள் பிரபலமானதே ரஜினி படங்களில் தான். அவர் எந்தவொரு வார்த்தையை ரிப்பீட்டு செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும். 


ரஜினியின் பிரபல பஞ்ச் டயலாக்குகள் :


சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷாவில் , நான் ஒருதடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, சுந்தர்.சி இயக்கிய அருணாசலத்தில், ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்., கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பாவில் என் வழி தனி வழி போன்ற ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் கூட பேசப்பட்டு வருகிறது. 


இதனால் இன்றைய கால கட்டத்தில் அறிமுக ஹீரோக்கள் கூட தங்கள் படத்தில் பஞ்ச் டயலாக்குகளை வைக்க இயக்குனர்களை வற்புறுத்துகின்றனர்.


இப்படி பஞ்ச் டயலாக்குகளை தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றிய ரஜினி, கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்களில் பஞ்ச் டயலாக்குகளை குறைத்து கொண்டார்.


இந்நிலையில், ரஜினி தற்போது நடித்து வரும் லிங்காவிலும் பஞ்ச் டயலாக் பேசியுள்ளாராம். ஆனால் அது மற்ற படங்களைப் போன்று ரிப்பீட்டு செய்யப்படவில்லையாம். ஒரே தடவை சொன்னாலும் ரசிகர்களின் மனதில் பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.


லிங்கா ரஜினியின் பஞ்ச் டயலாக் :


லின்காவில் பொதுமக்களுக்காக ஒரு அணை கட்டுவாராம் ரஜினி. ஆனால், அதற்கு ரஜினியுடன் கைகோர்க்கும்போது உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கிற பிரச்னைகள் வருமாம். அதைக்கண்டு கோபமாகும் ரஜினி, எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியர்களாக இருக்கிறவர்கள் மட்டும் என்கூட வாங்க அது போதும் என்பாராம். இந்த டயலாக் ஒரே இடத்தில் மட்டுமே ரஜினி பேசினாலும், கதையில் அவர் சொல்லும் இடம் முக்கியமானது என்பதால், இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும் என்கிறார்கள் படைக்குழுவினர். இதேபோல் பல காட்சியில் பஞ்ச் டயலாக் பேசுகிறாராம் ரஜினி. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்