Home  |  திரை உலகம்

அனிமேஷன் தொழில்நுட்பம் லிங்காவையும் விட்டு வைக்கவில்லை !!

கோச்சடையான் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி நடித்து வரும் படம் லிங்கா.


இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர்.


ஒரு அணையைக் கட்டுவதற்காக ரஜினிகாந்த் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதுதான் லிங்கா படத்தின் கதையாம். 


லிங்கா படத்தின் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு அணைகள் பக்கம் தண்ணீரே இல்லாததால்தான் கர்நாடகாவில் உள்ள அணைகள் பக்கமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் அணைகள் கட்டுவது என்பது சாதாரண வேலை கிடையாது.


சினிமாவிற்காக என்னதான் 'செட்' போட்டாலும் அணை கட்டுவதையெல்லாம் செட்டாக போட பல கோடிகள் செலவாகும். எனவே அணை கட்டுவது போன்ற காட்சிகளையும், அணை தகர்ந்து போவது, உடைந்து போவது போன்ற காட்சிகளையும் கிராபிக்ஸ் மூலம் செய்யவிருக்கிறார்கள். இதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டதாம். 


'கோச்சடையான்' படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பலவித எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் 'லிங்கா' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மிகவும் கவனத்துடன் உருவாக்கி வருகிறார்களாம். 


படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து அசத்தினாலும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்