நாட்டு மருத்துவம் ஒரு பார்வை - அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. இது காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும்.
இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.
இது மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும். ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். இது அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும்.
அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன்படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.
உடல் பலம் பெற - அதிமதுரம், நாட்டுரோஜா மொக்கு, சோம்பு இவற்றை சம அளவாக எடுத்து இடித்து சலித்து வைத்து கொண்டு இதில் 4 முதல் 6 கிராம் அளவுவரை எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் ஏற்படாது. உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
உள்உறுப்புகளின் சூடு தணியும். ஆண்மை பலவீனம் உடையவர்கள் அதிமதுர சூரணத்தை தொடர்ந்து சாப்பிட ஆண்தன்மை அதிகரித்து பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் உண்டாகும். தேனீர் கலந்து கொதிக்கவைத்தும் குடிக்கலாம்.
அதிமதுரம், அரிசிதிப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தனித்தனியாக பத்து கிராம் எடுத்து கொள்ள வேண்டும். இதில் முசு முசுக்கை இலை பத்துகிராம், ஆடாதொடை இலை பத்து கிராம் சேர்த்து 200மிலி தண்ணீரில் போட்டு காய்ச்சி 50 மில்லி லிட்டர் அளவில் சுண்டியதும் வடிகட்டி காலை இரவு இரண்டு வேளை குடித்த வரும்போது
நெஞ்சு சளி அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். இருமல் நின்று நலம் கிடைக்கும் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் இதை குடிக்கலாம். கருப்பை தொடர்பான நோய்கள் உள்ள பெண்கள் அதிமதுர சூரணத்தை காலை மாலை தொடர்ந்து சாப்பிட நோய் நீங்கும்.
பெண் மலடும் நீங்கி குழந்தை பேறு உண்டாகும். வாதபிடிப்பு, சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் ஆமணக்கு நெய்யை தடவி அதில் இலையை ஒட்டிவைத்தால் ஒருவித விறுவிறுப்பு ஏற்படும். படிப்படியாக வலி குறையும்.
இலைகள் இனிப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டவை. வேர்கள் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.
வேர், புண்கள், தாகம், அசதி, கண் நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சல் காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். காக்கை வலிப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், படர்தாமரை ஆகியவற்றை கட்டுப்படுத்தும். முடியை வளர்க்கும் பண்பும், ஆண்மையை பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு.
அதிமதுரம் நம் உடல் பலம் பெரும் ஆதாரம் !!
|