Home  |  வேலைவாய்ப்பு

எல் ஐ சி அதிகாரி - வேலை வாய்ப்புகள் !!

எல் ஐ சி அதிகாரி - வேலை வாய்ப்புகள் !!

நாம் அனைவரும் நன்கு அறிந்த இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் எல்ஐசியின் தென் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள அப்ரன்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர்ஸ் பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி விபரம் -
சென்னை - 142, கோவை - 73, மதுரை - 83, சேலம் - 60, தஞ்சாவூர் - 40, திருநெல்வேலி - 34, வேலூர் - 43, எர்ணாகுளம் - 37, கோட்டயம் - 46, கோழிக்கோடு - 43, திருச்சூர் - 38, திருவனந்தபுரம் - 40.

 

கல்வி தகுதி -

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு கல்லூரியில் 3 வருட/ நான்கு வருட பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் பாடத்தில் எம்பிஏ/ முதுநிலை டிப்ளமோ படித்திருப்பது விரும்பத்தக்கது. இரண்டு வருட எல்ஐசி ஏஜென்ட் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

 

சம்பள விகிதம் -

சம்பளம் - ரூ.11,535 - 28,865. வயது - 1.6.2015 தேதிப்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும் . அதிக பட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 

எல்ஐசி ஏஜென்டாக பணிபுரியும் பொதுப்பிரிவினருக்கு 7 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 12 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பொதுப்பிரிவினர் எனில் 42 வயது வரையிலும், எஸ்சி., எஸ்டியினருக்கு 47 வயது வரையிலும், ஒபிசியினருக்கு 45 வயது வரையிலும் சலுகை தரப்படும்.

 

ஆன்லைனில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, நெல்லை, வேலூர், புதுச்சேரி, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர் கோவில், நாமக்கல் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

 

விண்ணப்ப கட்டணம் -

பொது பிரிவினருக்கு ரூ.500. (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.50 மட்டும்). இதை ஆன்லைனில் செலுத்தலாம். www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

தேர்வு நடைபெறும் நாட்கள் விபரம் -

19.7.2015, 25.7.2015

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.6.2015.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!