Home  |  திரை உலகம்

குட்டி புலி (Kutti Puli )

குட்டி புலி (Kutti Puli )

Movie Name: Kutti Puli குட்டி புலி
Hero: SASIKUMAR
Heroine: LAKSHMI MENON
Year: 2013
Movie Director: Muthaiah
Movie Producer: Village Theaters
Music By: M. Ghibran


மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இந்தப் படத்தில் ஒரு வித்தியாசத்திற்கு மதுரையை அடுத்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை கதைக்களமாக்கியிருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் லால். இவரது தெருவைச் சேர்ந்த பெண் ஒருத்தியை பக்கத்துத் தெருவில் உள்ள ஒருவன் கிண்டல் செய்ததற்காக அவனைக் கொலை செய்கிறார். எதிர்பாராமல் எதிரிகளிடம் இவர் சிக்கிக் கொள்ள , குடும்பம் குழந்தை எல்லாவற்றையும் மறந்து தெருவுக்காக உயிர் துறக்கிறார். கணவன் லால் இறந்ததும், மகன் சசிகுமாரை வளர்த்து ஆளாக்குகிறார் சரண்யா.

இவரும் அப்பா போல் தெருவுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அப்பாவின் குணத்துடனே இருக்கிறார். அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து திருமணமே செய்து கொள்ளக் கூடாதென இருக்கிறார். அதே தெருவுக்கு குடி வரும் லட்சுமி மேனனுக்கு சசிகுமாரைப் பார்த்ததும் காதல் ஆரம்பமாகிறது. முதலில் குனிந்த தலை நிமிராமல் இருக்கும் சசிகுமாரும் போகப் போக லட்சுமி மேனனை காதலிக்கிறார்.இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே மிகப் பெரிய ரவுடியான ராஜசிம்மனை அடித்து, உதைத்து பஸ் ஸ்டாண்டில் கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் சசிகுமார். ராஜசிம்மன் சசிகுமாரை சமயம் பார்த்து போட்டுத் தள்ள கொலைவெறியுடனே அலைகிறார்.

‘குட்டிப்புலி’ கதாபாத்திரத்திற்காக சசிகுமார் செய்த அதிகபட்ச மாற்றம் தாடி வளர்த்தது மட்டுமே. மற்றபடி அதே பேச்சு, அதே சிரிப்பு, அதே உச்சரிப்பு என எதிலும் மாற்றமில்லை. லட்சுமி மேனன், ‘சுந்தரபாண்டியனில்’ பார்த்ததை விட இதில் இன்னும் சுந்தரமாக இருக்கிறார். ஆனால், இவரைக் கூட நடிக்க விடவில்லை இயக்குனர், நடக்கத்தான் விட்டிருக்கிறார். தெருவைப் பற்றிய கதை என்பதால் இவரும் சசிகுமாரும், தெருவில் நடந்து கொண்டேதான் காதலிக்கிறார்கள்.

வழக்கம் போல் அம்மாவாக சரண்யா. தேசிய விருது பெற்றவர், சொல்ல வேண்டுமா. இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார். சசிகுமார் நண்பனாக ‘ஆடுகளம்’ முருகதாஸ். நகைச்சுவைக்கென ‘படித்த நண்பர்களின்’ கூட்டணி. தெரு முக்கில் உட்கார்ந்து கொண்டு வெட்டிக் கதை பேசும் 5 படித்தவர்கள்தான் படத்திற்கு நகைச்சுவை காரணகர்த்தாக்கள். அதற்குத் தலைமை பாலா. ஆனால் சிரிப்பு மட்டும் வருவேனா என்கிறது. ஒரு முழு இளையராஜா பாடலை (கழுகு – பொன்னோவியம்…) சசிகுமார், லட்சுமி மேனன் காதலுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ஜிப்ரானின் இசை எப்படியிருந்தது என்று.

 

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்