Home  |  திரை உலகம்

ரிலீசாகும் முன்பே ஜிம்பாப்வே திரைப்பட விழாவிற்கு செல்லும் குற்றம் கடிதல் !!

குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படம் தான் குற்றம் கடிதல்.  


இந்த படத்தை, அறிமுக இயக்குனர் பிரம்மா.G இயக்கி உள்ளார். ஜே எஸ் கே பிலிம் corporation நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 


இந்த படத்திற்கு எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். அஜய், ராதிகா, பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 


குற்றம் கடிதல் படம் குறித்து, அதன் இயக்குனர் கூறும் போது ' கடிதல் என்றால் கண்டித்தல்  அல்லது கடிந்து கொள்ளுதல் என பொருள். ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை , அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம் , அதன் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் 'குற்றம் கடிதல்'. என்னுடைய இந்த கருத்தை படமாக்க உதவிய எனது தயாரிப்பாளர்  ஜே.எஸ்.கே அவரது நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் corporation  மற்றும் கிரிஸ் pictures கிறிஸ்டி அவர்களுக்கும் நன்றி ' என கூறினார்.


இந்த படம் குறித்து, அதன் தயாரிப்பாளர் ஜே எஸ் கே கூறும் போது, தரமான படங்களை தயாரித்து வெளியிடும் நிறுவனம் என்று எனது நிறுவனம் பெயர் வாங்க வேண்டும் என்பதே என்னுடைய தீவிரமான குறிக்கோள் என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஜே எஸ் கே . அவரது நிறுவனமான ஜே எஸ் கே பிலிம் corporation அடுத்ததாக தயாரித்து வெளியிடும் 'குற்றம் கடிதல்' அவரது நிறுவனத்துக்கு மேலும் புகழ் பெற்று தரும் என நம்புகிறார். 


திறமையான இளைஞர்களின் சங்கமம் ஆக இருக்கும் 'குற்றம் கடிதல்' பட குழுவினருக்கு திரை உலகில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.முற்றிலும் புதியவர்கள் நடிக்கும் இந்த படம் தேசிய அளவில் மட்டுமின்றிசர்வதேச  அளவிலும் பெயர் ஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை.


14வது ஜிம்பாப்வே திரைப்பட விழா ஜிம்பாப்பே நாட்டில் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  முதல் 11ஆம் தேதி வரை  நடக்க உள்ள சர்வதேச திரை பட விழாவில்  கலந்துக் கொள்ள தகுதி பெற்ற 'குற்றம் கடிதல்' மும்பையில்  அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை  நடக்க உள்ள 16ஆவது திரைப்பட விழாவில் 'இந்திய திரை அரங்கில் புதிய முகங்கள்' என்ற தகுதியின் கீழ் திரையிடப்பட உள்ளது. தமிழ் படங்களில் ஆயிரத்தில் ஒருவன், ஆரண்யா காண்டம் அடுத்து குற்றம் கடிதல் தான் மும்பை திரைப்பட விழா வில் திரையிடப்பட உள்ளது.இந்த மாதிரியான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரம் , ஒரு திரை படத்தை ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஒரு வலுவான கருத்து  உருவாக பெரிதளவு உதவுகிறது, விளம்பரங்கள் மிக மிக அவசியம் என கருதப்படும் இந்த கால கட்டத்தில் இது பெருமளவுக்கு உதவும்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்