Home  |  திரை உலகம்

கோவலனின் காதலி ( Kovalanin Kadhali )

கோவலனின் காதலி ( Kovalanin Kadhali )

Movie Name: Kovalanin Kadhali கோவலனின் காதலி
Hero: DILEEP KUMAR
Heroine: Kiranmai
Year: 2014
Movie Director: K Arjunraja
Movie Producer: Good Day Films
Music By: Bharathi K


நாயகன் திலீப் குமாரும், நாயகி கிரண்மையும் பாண்டிச்சேரியில் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகி மீது ஒரு தலை காதல். ஆனால் நாயகியோ ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் காதல் என்பதை நினைக்காமல் இருந்து வருகிறார். வறுமையால் கல்லூரி கட்டணத்தை செலுத்த பணம் இல்லாமல் தவிக்கிறார் கிரண்மை. அப்போது அவரின் தோழி, செல்வந்தர்களின் ஆசைக்கு இணங்கினால் நிறைய பணம் கிடைக்கும். அதன்மூலம் கல்லூரிப் படிப்பையும் தொடரலாம் என்று கூற, முதலில் மறுக்கும் கிரண்மை, பிறகு இதற்கு சம்மதிக்கிறாள்.

ஒரு புரோக்கரை கிரண்மைக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்த புரோக்கர் ஒருநாள் கிரண்மையை தொழிலதிபரான கசம்கானிடம் அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று தனது பிரச்சினையைக் கூறும் கிரண்மையை ஆறுதல்படுத்துகிறார் கசம்கான். அவரின் அரவணைப்பு, பண மோகம் கிரண்மையை கிரங்கவைக்க அவருடைய ஆசைக்கு இணங்குகிறாள். கசம்கானும் இவளென்றால் உயிராய் இருக்கிறார். ஒருநாள் கிரண்மையை காதலிக்கும்படி நாயகன் திலீப்குமார் தொந்தரவு செய்ய, இதை கிரண்மை கசம்கானிடம் கூறுகிறாள். கசம்கான் அந்த ஊரின் குப்பத்து தலைவரான ‘காதல்’ தண்டபாணி உதவியுடன் திலீப்குமாரை கொலை செய்கிறார்.

இந்நிலையில், இவர்களுடைய நெருக்கத்தின் பலனாக கிரண்மை கர்ப்பமாகிறார். டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கிறார் கிரண்மை. ஆனால், 5 மாதங்கள் ஆகிவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என டாக்டர் கைவிரிக்கிறார். சம்கான்-கிரண்மைக்குண்டான தொடர்பு கசம்கானின் வீட்டுக்கு தெரிய வருகிறது. இதை எதிர்க்கும் கசம்கானின் மனைவியும், மகளும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவரை மிரட்டுகிறார்கள். இறுதியில் கிரண்மையை கைவிட்டு விடுவதாக அவர்களிடம் உறுதிகூறுகிறார் கசம்கான். யாருடைய அரவணைப்பும் இன்றி தனிமையில் விடப்பட்ட கிரண்மையின் வாழ்க்கை அதன்பிறகு என்னவாயிற்று? நாயகன் திலீப் குமார் படத்தில் இரண்டு பாடல்களுக்கு டூயட் ஆடுவது, ஒரு சண்டைக்காட்சி என ஒரு சில காட்சிகளே வருகிறார்.

நாயகி கிரண்மை மகிழ்ச்சி, சோகம், அழுகை, கோபம், காதல், ரொமான்ஸ், கவர்ச்சி என இன்றைய முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். தொழிலதிபராக வரும் கசம்கான் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். நாயகி மீது பாசமும், நாயகிக்காக கொலை செய்யுமளவுக்கு துணியும் கொடூர வில்லனாகவும் பன்முகம் காட்டியிருக்கிறார். குப்பத்து தலைவராக வரும் ‘காதல்’ தண்டபாணி தனது குப்பத்து ஜனங்களின் வாழ்க்கைக்காக என்ன வேணும்னாலும் செய்யக்கூடிய கதாபாத்திரம். படத்திற்கு மற்றொரு பலம் இப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்தான். நிறைய வசனங்கள் சிந்திக்க வைப்பவையாக உள்ளன.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்