Home  |  அறுசுவை

கொத்து கோழி (Bunch Of Chicken)

கொத்து கோழி (Bunch Of Chicken)

தேவையானவை :

 

கோழி - அரைக் கிலோ

வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)

தக்காளி - பாதி (நறுக்கியது)

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

பெருஞ்சீரக பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் குக்கரில் கோழித் துண்டுகளை போட்டு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும். குக்கர் ப்ரஷர் அடங்கியதும் திறந்து கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்து விடவும் .

 

2.மீண்டும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவைகேற்ப உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி போடாமல் கொதிக்க விடவும். கோழி முழுமையாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும்.

 

3.குக்கரின் உள் இருக்கும் கிரேவியை தனியே எடுத்து கொள்ளவும். கோழித்துண்டுகளிலிருந்து எலும்பை நீக்கி விட்டு சதைபற்றுள்ள பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும். 

 

4.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு இரண்டு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம், தக்காளியுடன் உதிர்த்த கோழியை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். தனியே எடுத்து வைத்திருக்கும் கிரேவியை சேர்த்து கிளறவும்.

 

5.மிதமான தீயில் கொத்து பரோட்டா போல் உதிரியாக வரும் வரை வைத்து கிளறவும். கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.சுவையான கொத்துக் கோழி தயார். 

Bunch of Chicken

Ingredients for Bunch of Chicken :


Chicken - 1/2 Kg,

Onion - 1 (Chopped),

Tomato - 1/2 (Chopped),

Turmeric Powder - 1/2 Tsp,

Large Cumin Powder - 1 Tbsp,

Curry Leaves - 2 Bunches,

Chilli Powder - 1 Tbsp,

Coriander Powder - 1 Tbsp,

Oil - 1 Tbsp,

Coconut Oil - 1 Tbsp,

Salt - as needed,

Ginger Garlic Paste - 1 Tbsp.


Method to make Bunch of Chicken :


1. First add the chicken pieces in a cooker and add ginger garlic paste , turmeric powder, water and salt all together. And allow it to come 2 whistles. After it whistled open the cooker and filter the chicken pieces. Then keep the extract aside. 

2. Add the cooked chicken pieces in a cooker then add chilli powder, coriander powder, cumin powder, a cup of water and salt and allow it to boil for some minutes. After some amount of water is reduced then take out the chicken pieces and let it be cooled.

3. Then take out the gravy from cooker and keep it aside. Then remove the bones from chicken and keep it aside.

4. Heat oil in a pan then add chopped onions, salt and fry them. Then add tomatoes and allow it to boil for a minute. Then add the cooked boneless chicken along with them. Then stir it for 5 minutes. Then add the remained gravy along with them. 

5. In a low flame stir until the gravy seperates. Then add curry leaves, coconut oil along with them and allow it to boil for a minute. Turn off the stove.


Delicious Bunch of Chicken is ready to eat.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!