Home  |  அறுசுவை

கொட்ரா கோழி குருமா (Kotra Chicken Kurma)

தேவையானவை :

கோழி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - மூன்று
தக்காளி - நான்கு
இஞ்சி பூண்டு விழுது - நான்கு டீஸ்பூன்
மல்லிதழை - சிறிது
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - நான்கு

அரைக்க தேவையானவை :

மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
சோம்பு - கால் டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
முந்திரி - பத்து
ஏலக்காய் - மூன்று
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :


1.ஒரு வாணலியை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.பிறகு மல்லி இலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

2.இதனுடன் சுத்தம் செய்த கோழியை சேர்த்து ஒரு முறை பிரட்டிவிட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கிளறவும். உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.கோழி பாதி வெந்ததும் அரைத்த கலவையை போட்டு தண்ணீர் சேர்த்து கிளறி வேக விடவும்.கலவை வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

Kotra Chicken Kurma

Ingredients for Kotra Chicken Kurma:

Chicken-1kg

Big Onion-3

Tomato-4

Ginger, Garlic Paste-4tsp

Coriander Leaves-Little

Garam Masala-1tsp

Green Chilly-4

Ingredients for Grinding:

Pepper, Cumin Seed-Each 1 tsp

Cinnamon-Small Piece

Fennel-1/4tsp

Coconut-1/2cup

Cashew Nuts-10

Cardamom-3

Salt, Oil-Enough Need

Procedure to make Kotra Chicken Kurma:

1.Heat oil in a pan, add cinnamon, cardamom and let to splutter. Then add onion and fry well. After that add ginger garlic paste and sauté well. Then add coriander leaves, tomato, green chilly and sauté finely.

2.Now add chicken along with turmeric powder, chilly powder, garam masala and stir well. Add salt and water and allow to cook well. When chicken is half cooked, add the grinded ingredients together with this masala and cook well. When chicken cooked well, garnish with coriander leaves and remove from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!