Home  |  அறுசுவை

கொண்டைக்கடலை பிரியாணி (Kondai Kadalai Briyani)

தேவையானவை:

 

பாசுமதி அரிசி - 1 கப்

கொண்டைக்கடலை - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

உப்பு

மஞ்சள் தூள் - சிறிது

 

அரைக்க தேவையானவை :

 

தக்காளி - 1

முந்திரி - 5

இஞ்சி, பூண்டு - சிறிது

பச்சை மிளகாய் - 2

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிது

 

 

தாளிக்க தேவையானவை :

 

நெய் ,எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 1

பிரியாணி இலை - 1/2

 

செய்முறை:

 

1.முன் நாளே ஊற வைத்த கொண்டைக்கடலையை லேசாக உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.அரிசியை கழுவி ஊற வைக்கவும்.அரைக்க தேவையானபொருள்களை மிக்ஸ்சியில் போட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

 

2.அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் போது அரிசியை நீர் இல்லாமல் வடித்து சேர்த்து பிரட்டவும்.அரிசி நன்றாக கலந்த பின் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.கொதி வந்ததும் மிதமான தீயில்  வைத்து மூடி வேக விடவும்.முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து மூடி வேக விடவும்.சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.

Kondai Kadalai Briyani

Ingredients for Kondai Kadalai Briyani:

 

Basmati Rice-1 Cup

Bengal Gram-1/2 Cup

Onion-1

Tomato-1

Salt

Turmeric Powder-Little

 

Ingredients for Grinding:

 

Tomato-1

Cashew nuts-5

Ginger, Garlic Paste-Little

Green Chilly-2

Grated Coconut-1 Tbsp

Coriander Leaves-Little

 

Ingredients for Tempering:

 

Ghee, Oil-2 Tbsp

Cinnamon-1 Piece

Cloves-2

Cardamom-1

Bay Leaf-1/2

 

Procedure to make Kondai Kadalai Briyani:

 

1. Boil the overnight soaked bengal gram along with salt. Then allow to soak the rice. Grind the given grinding ingredients. Heat oil in a vessel, add frying ingredients and let to splutter. Then add onion and tomatoes.

2. Add Ground paste, turmeric powder, salt and fry till the raw smell subsides. When the oil floats on top, add rice and stir well. Add 2 cup of water and let to boil in medium flame. When the rice is 3/4 th cooked, add bengal gram and cover the vessel and let to boil well. Now kondai kadalai briyani is ready to taste.

 

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!