Home  |  நாட்டு நடப்பு

கொல்கத்தா - மும்பை போட்டியில் அரங்கேறிய சாதனைகளும், சுவாரசிய தகவல்களும் !!

எட்டாது ஐபிஎல் தொடரின் முதலாவது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் சில முக்கியமான நிகழ்வுகள் இதோ...

டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பை அணி துவக்கத்தில் மார்னே மார்கல் எதிர் கொள்ள தயங்கியது. இவரது பந்தில் முதலில் ஆரோன் பின்ச்(5) அவுட் ஆனார். உமேஷ் யாதவ் ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, சாகிப் பந்தை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார். ஆதித்ய தாரே(7) நிலைக்கவில்லை.

மார்கல் பந்தில் அம்பதி ராயுடுவும்(0) கிளம்ப, மும்பை அணி 5.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்து திணறியது.

தனது 4 ஓவரில் 18 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய மார்கல், கோல்கட்டாவுக்கு கைகொடுத்தார். இவரது ஓவர் முடிந்த நிலையில், ரோகித், கோரி ஆண்டர்சன் சேர்ந்து விவேகமாக ஆடினர்.
4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தனர். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 15வது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரோகித், அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஆண்டர்சன், சாகிப் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அரைசதம் கடந்தார். மும்பை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.  

168 என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு உத்தப்பா 9 ரன்னில் அவுட் ஆனது பெரிய ஏமாற்றமாக இருந்தது. பின்னர் காம்பிர், மனிஷ் பாண்டே சேர்ந்து அபாரமாக ஆடினர். ஹர்பஜன், பிரக்யான் ஓஜா, மலிங்கா என யார் பந்துவீசினாலும் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து நொறுக்கினர். பாண்டே 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து, வெளியேறினார். அரைசதம் கடந்த காம்பிர்(57), பும்ரா 'வேகத்தில்' வீழ்ந்தார்.



அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் துடிப்பாக ஆடி, அணியை வெற்றிப் பாதையை நோக்கி கொண்டு சென்றார். பும்ரா வீசிய போட்டியின் 17வது ஓவரில் யாதவ் 2 சிக்சர், யூசுப் பதான் ஒரு சிக்சர் அடிக்க, 20 ரன்கள் எடுக்கப்பட்டன.

வினய் குமார் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய யாதவ், அணியின் வெற்றியை விரைவில் உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. யாதவ்(46), யூசுப்(14) ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

மும்பை - கொல்கத்தா போட்டியில் அரங்கேறிய சில சுவாரசிய தகவல்கள் :

கொல்கத்தா தொடர்ச்சியாக பெற்ற பத்தாவது வெற்றி இதுவாகும்.

கொல்கத்தாவின் சூர்யகுமார், அதிகபட்சமாக 5 சிக்சர்கள் விளாசினார்.

ஆட்ட நாயகன், விருதை மோர்க்கல் தட்டிச் சென்றார். அவர் 4 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மொத்தம் 18 சிக்சர்கள் போட்டியில் விளாசப்பட்டன. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் 7 சிக்சர்களும், கேகேஆர் தரப்பில் 11 சிக்சர்களும் அதில் அடங்கும்.

மொத்தம் 29 பவுண்டரிகள் விளாசப்பட்டன. மும்பை 18ம், கேகேஆர் 11ம் விளாசின. போட்டியில், சிக்கன பவுலர் மோர்க்கல் என்றால், வாரி வழங்கிய பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவாகும். 3 ஓவர்கில் 38 ரன்கள் கொடுத்த அவருக்கு ஆறுதலாக ஒரு விக்கெட் கிடைத்தது.

இந்த போட்டியில் இரண்டு அணிகளையும் சேர்த்து ஒரு பேட்ஸ்மேன் மட்டும் டக் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணியின் அம்பத்தி ராயுடுதான் அந்த பேட்ஸ்மேன்.

ரோகித்-கோரி ஆன்டர்சன் இடையேயான 131 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் பெஸ்ட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. மும்பை பேட் செய்தபோது உமேஷ் யாதவ் வீசிய 15வது ஓவரில் அதிகபட்சமாக 21 ரன்கள் விளாசப்பட்டன.

மும்பை கேப்டன் ரோகித் 98, கொல்கத்தா கேப்டன் கம்பீர் 57 ரன்கள் எடுத்திருந்தனர். இரு கேப்டன்களின் பங்களிப்பு மட்டும் 155 ரன்களாகும். ஐபிஎல் வரலாற்றில் இரு எதிர் அணி கேப்டன்கள் சேர்ந்து குவித்த அதிக ரன்னும் இதுவாகும்.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் வீசிய கொல்கத்தா இன்னிங்சின் 2வது ஓவரில் கம்பீரின் பேட் உடைந்து விழுந்தது.



கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானம் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்கு கடைசியாக விளையாடிய இரண்டு இன்னிங்சில் 238 பந்துகளில் 362 ரன்கள் குவித்தார். அதாவது, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 பந்தில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். நேற்று 65 பந்தில் 98 ரன்கள் எடுத்தார்.

ஐ.பி.எல்., வரலாற்றில் 3000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை நேற்று ரோகித் சர்மா (113 போட்டி, 3001 ரன்) பெற்றார். முதலிடத்தில் சென்னை அணியின் ரெய்னா(115 போட்டி, 3325 ரன்) உள்ளார்.

நேற்று 57 ரன்கள் எடுத்த கோல்கட்டா கேப்டன் காம்பிர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள ரெய்னா (24) சாதனையை சமன் செய்தார். மும்பை வீரர் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் (23) உள்ளார்.

முதன் முதலாக

எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் முதன் முதலில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள்.

முதல் 'டாஸ்' வென்றார் கோல்கட்டா கேப்டன் காம்பிர்

முதல் பந்தை வீசினார் கோல்கட்டாவின் உமேஷ் யாதவ். இதனை சந்தித்த ரோகித் சர்மா ரன் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் முதல் ரன்னை எடுத்தார்.

முதல் பவுண்டரியை மார்னே மார்கல் பந்தில் மும்பை அணியின் பின்ச் அடித்தார்.

முதல் விக்கெட்டை வீழ்த்தினார் கோல்கட்டாவின் மார்னே மார்கல். இவரது பந்தில் பின்ச் அவுட்டானார்.

முதல் சிக்சரரை சாகிப் பந்தில் ரோகித் சர்மா அடித்தார்.

மும்பையின் அம்பதி ராயுடு, இத்தொடரில் முதல் 'டக் அவுட்டான முதல் வீரர்.

முதல் அரைசதம் அடித்தார் ரோகித் சர்மா.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?