Home  |  நாட்டு நடப்பு

1 பந்தில் இங்கிலாந்துக்கு தேவை 6 ரன்.. பரபர நிமிடத்தில் பும்ராவிடம் கோஹ்லி சொன்னது என்ன தெரியுமா?

1 பந்தில் இங்கிலாந்துக்கு தேவை 6 ரன்.. பரபர நிமிடத்தில் பும்ராவிடம் கோஹ்லி சொன்னது என்ன தெரியுமா?

நாக்பூர்: இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

முதலில் பேட் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள்தான் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து இருந்தது. அந்த அணியின் கைவசம் 6 விக்கெட்டுகளும் இருந்தன. ஆனால், ஆனால் பும்ரா அருமையாக பந்து வீசி வெற்றியை இந்தியா பக்கம் திருப்பினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்திய பும்ராவின் 2வது பந்தில் மொயின் அலி 1 ரன்தான் எடுத்தார்.

 

3வது பந்தை சந்தித்த பட்லரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தில் பட்லரை பௌல்ட் செய்தார் பும்ரா. இதனால் கடைசி 2 பந்துகளில் இங்கிலாந்துக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தை ஜோர்டான் சந்திக்க அதில், 1 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சந்தித்த மொயீன் அலியால் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. எனவே இந்த குறைந்த ஸ்கோர் கொண்ட த்ரில் மேட்சில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன்படுத்தியுள்ளது.

 

கடைசி பந்தில் சிக்சர் அடித்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது என்பதால், கடைசி பந்து வரை போட்டி த்ரில்லாக போனது. ஆனால் நரம்புகளை கூல் செய்து கொண்டு அருமையாக பந்து வீசிய பும்ரா வெற்றிக் கனியை தட்டிப்பறித்தார். ஆனால் இவரது இந்த திறமையான பவுலிங்கின் பின்னணியில் இருந்து தட்டிக்கொடுத்தது கேப்டன் விராட் கோஹ்லி என்ற தகவல் பின்னர் வெளியாகியது.

 

போட்டிக்கு பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பும்ரா, இதுகுறித்து கூறுகையில், கேப்டன் என்மீது வைத்த நம்பிக்கையே வென்றது. நான் எந்த மாதிரி பந்தை வேண்டுமானாலும் வீசிக்கொள்ளலாம் என்ற சுதந்திரதத்தை கோஹ்லி அளித்தார். எனவே எனக்கு எது மிகவும் வசதிகரமான பந்துவீச்சு என உள் மனம் சொன்னதோ அதைப்போன்றே வீசினேன்.

 

இந்தியா பேட் செய்தபோதே, இந்த விக்கெட்டின் தன்மையை நான் கணித்து விட்டேன். ஸ்டேடியம் மிகப்பெரியது. பிட்ச் ஸ்லோவானது. எனவே நான் லென்த் பந்துகளையும், ஸ்லோ பந்துகளையும் அதிகம் பயன்படுத்தினேன். இது வெற்றியை ஈட்டித் தந்தது என்றார்.

 

கேப்டன் கோஹ்லி கூறுகையில், பும்ரா கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்திலும் என்னிடம் ஐடியா கேட்டபடி இருந்தார். ஆனால் நானோ உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதுபோல பவுலிங் போடுங்கள். சிக்சர் போனாலும் பரவாயில்லை. அடுத்த போட்டியில் கற்றுக்கொள்ளலாம். உலகம் ஒன்றும் இத்தோடு முடிந்துவிடாது என்று அட்வைஸ் செய்திருந்தேன். கடைசி பந்தில் 6 ரன் தேவை என்றபோது, லென்த் பந்து போடலாமா என கேட்டார். நான், ஆப்சைடில் ஓவர் பிட்ச் பந்தை வீசச்சொன்னேன். அது ஃபுல்டாசாக மாறினால் கூட பவுண்டரிதான் அடிக்க முடியும். சிக்சர் போகாது, நாம் வென்றுவிடலாம் என்று கூறினேன். இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.

Kohli about pumra
  30 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?