Home  |  திரை உலகம்

கோச்சடையான் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் படம் கோச்சடையான். பொங்கலை ஒட்டி வெளியாக இருக்கும் இந்த படத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ,

 

ரஜினியின் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு இழுக்கும் மந்திரம். கோச்சடையான் படமும் முழுமையான ரஜினிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்துக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறாராம் கே.எஸ். ரவிகுமார். 

 

தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி கோச்சடையான். அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து. 

 

முதல் பாதியில் தளபதியாக இருக்கும் அப்பா ரஜினியை மையப்படுத்திக் கதை நகர்கிறது என்றால், எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி. 

 

கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்கள். ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.

 

ஷோபனாவுக்கும் - ராணாவுக்கும் இடையே நடக்கும் பரதப்போட்டி அரங்கத்தை அதிர வைக்கும்.

 

சீன மார்ஷியல் ஆர்ட் சண்டைப் படங்களில், நாயகனும் அவனது நண்பனும் இணைந்து, எதிரியைத் தந்திரமாகத் தாக்கும் ஃபார்முலா உலகப் புகழ் பெற்றது. இதைப் போலவே அப்பா - மகன் என இரு ரஜினிகளும் இணைந்து எதிரியைத் தாக்கும் காட்சி, ஜப்பான் மற்றும் சீன, ஐரோப்பிய ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் விருந்தாக அமையும்.

 

படத்தின் மிகப்பெரிய விஷயமாக இருக்கப்போவது ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள் அணிந்துவரும் ஆடைகளும்தான். படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 

முக்கியமாக இது 3டி அனிமேஷன் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தாத மேம்பட்ட அனிமேஷன் படம் என்பதால், லைவ் ஆக்‌ஷன் படம்போல உணரலாம் என்கிறார்கள் படக்குழுவினர்.

 

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புகளுக்கு மட்டுமே ரஜினி குரல்கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் டப் செய்யப்படாமல் நேரடி தமிழ்ப் படமாக ரிலீஸ் ஆக உள்ளது கோச்சடையான்.

 

படம் 125 நிமிடங்கள் ஓடும் நேரம். இண்டர்வெல் கிடையாது.

 

படத்தின் இறுதி தொழில்நுட்ப வேலைகள், சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

 

ஏ.ஆர்.ரகுமான் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்த பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்