Home  |  திரை உலகம்

கோச்சடையான் - ஒரு அப்டுடேட் தகவல் !!

தனது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள படம் தான் கோச்சடையான். இந்த படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் ஏப்ரல் 11 ம் தேதி வெளியிடுகிறது. இந்நிலையில் கோச்சடையான் படம் குறித்த லேட்டஸ்ட் சுவையான விசயங்களை இப்போது பார்ப்போமா.....

 

10 மொழிகளில் வெளியீடு :

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. 

 

இந்திய நட்சத்திரம் ஒருவரின் படங்கள் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை.

 

இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.

 

6000 திரையரங்குகளில் வெளியீடு :

 

ஹாலிவுட் படங்களுக்கு அடுத்து, அதிக அரங்குகளில் வெளியாகும் படம் கோச்சடையான்தான்! 

 

ரஜினியின் எந்திரன் 3300 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின் வந்த சில பாலிவுட் படங்கள் - க்ரிஷ் 3, தூம் 3- கிட்டத்தட்ட 4000 அரங்குகளில் வெளியானதாக அறிவிக்கப்பட்டன. இப்போது அத்தனை படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் கோச்சடையான் 6000 ப்ளஸ் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் படத்தின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகவிருக்கிறது. மற்ற மொழிகளில் தயாராகியிருக்கும் கோச்சடையானும் வெளியாகிறது. தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது. 

 

அமெரிக்கா, ஐரோப்பாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 1000க்கும் அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது ஈராஸ் நிறுவனத்தின் அய்ங்கரன் இன்டர்நேஷனல். தெலுங்கில் மட்டும் 1000 அரங்குகளுக்கு மேல் கோச்சடையானின் தெலுங்கு வடிவமான விக்ரமசிம்ஹாவுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

 

3500 அரங்குகள் கொண்ட ஜப்பானில் மட்டும் 1000 அரங்குகளில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

 

இசை வெளியீட்டு தேதி :

 

இசை வெளியீடு 11-ம் தேதி, 15-ம் தேதி என இருவேறு தேதிகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

 

இதுகுறித்து விசாரித்தபோது, நிச்சயம் பிப்ரவரி இறுதிக்குள் கோச்சடையான் பாடல்களை வெளியிட்டுவிடுவோம் என்றும், விழா குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். 

 

படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளன. சோனி நிறுவனம் இசையை வெளியிடுகிறது. 

 

கதை :

 

கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து. 

 

முதல் பகுதியில் கோச்சடையானின் ஆதிக்கம் இருக்கும். ஆர்வ கோளாறினால் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று கோச்சடையான் மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

 

கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே. ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.

 

ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

 

படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

 

படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இண்டர்வெல் கிடையாது.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்