Home  |  திரை உலகம்

நம்மால் மற்ற படங்கள் பாதிக்க கூடாது !! கோச்சடையான் ரிலீஸை தள்ளி போடசொன்ன ரஜினி !!

பொங்கலையொட்டி வெளிவர இருந்த கோச்சடையான் திரைப்படத்தை, அதே தேதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

கோச்சடையான் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் மட்டும் 750 தியேட்டர்களைத் தர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் அதே தேதியில் விஜய் நடித்த ஜில்லாவும் அஜீத் நடித்த வீரமும் வெளியாவதாக அறிவித்தனர். இதனால் விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம், ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாக ரஜினியிடம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளார்.

 

இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வைத்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ரஜினி, நம்மால் எந்த வகையிலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, 'நம்ம படம் சோலோவாவே வரட்டும். அதுக்கேத்த மாதிரி ஒரு தேதியை டிசைட் பண்ணுங்க," என்றாராம். என்ன ஒரு நல்ல மனசு........

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்