Home  |  திரை உலகம்

கோச்சடையான் - திரை விமர்சனம் !!

இயக்குனர் - சௌந்தர்யா ஆர். அஸ்வின்

கதை - கே. எஸ். ரவிக்குமார்

நடிகர் - ரஜினிகாந்த்

நடிகை - தீபிகா படுகோனே 

இசை - ஏ. ஆர். ரகுமான் 

கோட்டையபட்டினம் என்னும் நாட்டின் அரசர் நாசர். இவரது படைத்தளபதிதான் கோச்சடையான்(அப்பா ரஜினி). 

கோச்சடையானுக்கு ராணா, சோனா(இருவருமே ரஜினிதான்) என்ற இரு மகன்கள் உள்ளனர். 

கோச்சடையான் சிவா பக்தியில் மட்டுமல்ல வீரத்திலும் சிறந்து விளங்குபவர். இதனால் கோட்டையபட்டினம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார். 

இதனை கட்டும் பொறாமை கொள்ளும் அரசர் நாசர், கோச்சடையானை எப்படியாவது தீர்த்து கட்ட சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கோச்சடையான், போருக்கு தேவையான குதிரைகளை வாங்க, வெளிநாட்டுக்கு கப்பலில் சென்று வந்து கொண்டிருக்கும் போது, கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். 

வீரத்தில் சிறந்தவரான கோச்சடையான் கலிங்கபுரி வீரர்களை கலங்கடிக்க செய்கிறார். அப்போது தப்பித்து செல்லும் கலிங்கபுரி வீரர்கள் கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள். 

வீரர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார் கோச்சடையான். 

இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் மன்னர் ஜாக்கி ஷெராப், அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார்

அதற்கு கோச்சடையான் சம்மதிக்க வீரர்கள் அனைவரும் காப்பற்றப்படுகிரார்கள். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைக்கிறார். வீரர்கள் இல்லாமல் தாய் நாடு திரும்பும் கோச்சடையான் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார். 

இவை அனைத்தையும் அறியும் இளைய மகன் ராணா தனது தந்தையின் கனவை நிறைவேற்ற கலிங்க புரிக்கு செல்கிறார். அங்கே வீர சாகசங்கள் புரிந்து, மன்னன் மனதில் இடம் பிடித்து அந்நாட்டிற்கே தளபதி ஆகிறார்.

பிறகு தனது தந்திரத்தால், அடிமைகளாக கிடக்கும் கோட்டையபட்டினம் வீரர்களை போர்ப் படையில் சேர்த்து, கோட்டையபட்டினத்திற்கு எதிராக இளவரசர் ஆதி தலைமையில் போர்தொடுக்கிறார். 

போர்க்களத்தில் சண்டை போடுவதற்கு பதில் ராணாவும், கோட்டையபட்டினம் இளவரசராக வரும் சரத்குமாரும் கட்டிப் பிடிக்கின்றனர். அப்போதுதான் ஆதிக்கு ராணாவின் சூழ்ச்சி புரிகிறது. 

இந்நிலையில், ராணாவின் தங்கையாக வரும் ருக்மணி, கோட்டையபட்டினம் இளவரசர் சரத்குமாரை காதலிக்கிறார். கோட்டையபட்டினம் இளவரசி தீபிகா படுகோனேவை ராணா காதலிக்கிறார். 

இவர்களின் காதல் விவகாரம் நாசருக்கு தெரியவர, ஆவேசப் படுகிறார் நாசர். 

இதன் பின் ஒரு நாள் முகமூடி அணிந்த ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து நாசரை கொல்ல முயற்சிக்கிறான். அவனை வீரர்கள் பிடித்து முகமூடியை கழற்றும்போது அது ராணா என்பதை கண்டு அதிர்கின்றனர். தந்தையை கொன்றதற்காக பழி வாங்க வந்ததாக ராணா சொல்கிறான். அவனை சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து ராணா தப்பிக்கிறான். 

இதற்கிடையே, தீபிகா படுகோனேவுக்கும், ஜாக்கி ஷெராப் மகன் ஆதிக்கும் அவசர அவசரமாக நாசர் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். 

இறுதியில் தனது தந்தையை கொன்ற நாசரை ராணா பழிவாங்கினாரா, ராணாவின் அண்ணன் என்ன ஆனார், காதல் ஜோடிகளின் காதல் கரை சேர்ந்ததா என்பது தான் கோச்சடையான் படத்தில் மீதி கதை.  

கோச்சடையான் அனிமேஷன் படம் என்றாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. 

அனிமேஷன் கதாபாத்திரங்களில் வரும் ரஜினி, நாசர், சோபனா, ஆதி ஆகியோரின் உருவங்கள் அருமையாக உள்ளது. சரத் குமார், ஜாக்கி செராஃப் உருவங்கள் பரவாயில்லை. ஆனால் மிகவும் மோசம், தீபிகா படுகோனே மற்றும் தங்கையாக வரும் ருக்மிணி, சண்முகராஜா உருவங்கள் தான். 

கோச்சடையான் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் அவதார் படத்திற்கு இணையாக இல்லை என்றாலும், இந்தியா சினிமா உலகில் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது..

கே.எஸ்.ரவிகுமாரின் கதை-திரைக்கதை-வசனம் தான் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக அமைந்துள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும், பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் அருமை....

மொத்தத்தில் கோச்சடையான்.......  எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும்..... ஒரு முறை பார்க்கலாம்...... 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்