Home  |  திரை உலகம்

கோச்சடையான் பாடல் வரிகள் !!

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கோச்சடையான். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வரும் 9 ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் கோச்சடையான் பாடல் வரிகள் தற்போது வெளியாகியுள்ளது. 


ரசிகர்களின் பார்வைக்காக இதோ, பாடலுக்கான சூழல்களும், பாடல் வரிகளும்,


கோச்சடையானின் திருமணத்தின் போது வரும் பாடல் :


கோச்சடையான் தன் காதலியின் அழகையும், அவளை மணக்கப்போகிற சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிற பாடலாக இதனை உருவாக்க முதலில் முடிவு செய்தார்கள். ஆனால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இது போன்று நிறைய பாடல்கள் வந்து விட்டது. மணக்கப்போகும் காதலிக்கு கோச்சடையான் சில சத்தியங்களை செய்து தருவது போல் பாடல் இருந்தால் புதுமையாக இருக்கும் என்று சொல்ல உருவானது இந்தப் பாடல்...


காதல் கனியே உன்னைக் கைவிட மாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியம்

மாலை சூடிய காலைக் கதிரின் மேலே

சத்தியம் இது சத்தியம் 

ஒரு குழந்தை போலே...

ஒரு வைரம் போலே...

தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப் பிறவியில் இன்னொரு பெண்ணைச்

சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம் சாயாப்

பிரியம் காப்பேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே


செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து

சேவை செய்வேன்

நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து

நித்தம் எழுவேன்

கைப்பொருள் யாவும் கரைந்தாலும் 

கணக்கு கேளேன்

ஒவ்வொரு வாதம் முடியும் போதும்

உன்னிடம் தோற்பேன்

சத்தியம் இது சத்தியமே


மாதமலர்ச்சி மறையும் வயதில் 

மார்பு கொடுப்பேன்

நோய் மடியோடு நீ வீழ்ந்தால்

தாய் மடியாவேன்எதிரிகளை வீழ்த்தி திரும்பும் போது : 


வீரத் தளபதி கோச்சடையான் ஒரு போரில் எதிரிகளை வீழ்த்திவிட்டு நாட்டுக்கு திரும்புகிறார். வரும் வழியில் சாலையில் இருபுறமும், வீடுகளின் பால்கனிகள், மொட்டைமாடிகளில் நின்ற கொண்டு மக்கள் கோச்டையானை போற்றி பாடுகிறார்கள். அந்த வாழ்க்கை ஏற்றுக் கொள்ளும் கோச்சடையான் மக்களுக்கு நல்ல தத்துவங்களை சொல்கிறார். இப்படியான ஒரு பாட்டு சூழல். இதில் மக்களுக்கு தத்துவம் சொல்லும் குரல் ரஜினியுடையது. ஆம் ரஜினியே பாடியுள்ளார். இனி பாடலுக்கு வருவோம்.


மக்கள் பாடுகிறார்கள்...


உண்மை உருவாய் நீ

உலகின் குருவாய் நீ

எம் முன் வருவாய் நீ

இன்மொழி அருள்வாய் நீ


உன் மார்போடு காயங்கள் ஓராயிரம்

உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம்

தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும்

இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும்


இப்போது ரஜினி பாடுகிறார்...


எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு

முதல் வழி மன்னிப்பு

மாறும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது

மாறுவதெல்லாம் உயிரோடு

மாறாததெல்லாம் மண்ணோடு


பொறுமைகொள்

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்

அது பனிக்கட்டி ஆகும்வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்

விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையை விட

நண்பனின் பகையே ஆபத்தானது


சூரியனுக்கு முன் எழுந்து கொள்

சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா உயிரா பெயரா

மூன்றும் இல்லை செயல்


நீ போகலாம் என்பவன் எஜமான்

வா போகலாம் என்பவன் தலைவன்

நீ எஜமானா? தலைவனா?


நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னை துரத்தும்

எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்


பெற்றோர்கள் அமைவது விதி

நண்பர்களை அமைப்பது மதி


சினத்தை அடக்கு

கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான்.

நண்பா எல்லாம் கொஞ்ச காலம்.


கிளைமாக்ஸ் பாடல் :


போர்களில் தான் பெற்ற வெற்றியை மக்களுக்கு அர்ப்பணித்து கோச்சடையான் பாடுவதாக வரும் பாடல். இதை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியிருக்கிறார்.


இனி பாடல்...


ஆகாய மேகங்கள் பொழியும்போது

ஆதாயம் கேளாது

தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும்

தனக்காக வாழாது


ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே

தோல்விகளால் துவண்டு விடாதே

வெற்றிகளால் வெறி கொள்ளாதே


கல்லடி கல்லடி படுமென்பதாலே

மரம் காய்க்காமல் போவதில்லை

சொல்லடி சொல்லடி படுமென்பதாலே

வெற்றி காணாமல் போவதில்லை

மாலைகளை கண்டு மயங்காதே

மலைகளை கண்டு கலங்காதே


காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை

கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை&உன்

வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை


நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா&நீ ஓடிக்கொண்டே இரு

நிம்மதி வாழ்வில் வேண்டுமா& பாடிக்கொண்டே இரு

கோழை மகன் மன்னித்தால்& அது பெரிதல்ல பெரிதல்ல

வீரன் மகன் மன்னித்தால்& அது வரலாறு வரலாறு


பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன்

கடமை வீரனே... அந்தப்

பொன்னை ஒரு நாள்

மண்ணாய்ப் பார்ப்பவன் கர்ம வீரனே.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்