Home  |  திரை உலகம்

கோச்சடையான் ரிலீசாவதில் புதிய சிக்கல் !!

எந்திரன் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்த படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லை என தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்த தகவலின் முழு விவரங்கள் பின்வருமாறு, கோச்சடையான் படத்தை ஆரம்பத்தில் மும்பையைச் சேர்ந்த ஈராஸ் நிறுவனம் முதலீடு செய்தது. 


அதன் பிறகு கோச்சடையான் படத்தை ரஜினி சார்பாக மீடியா ஒன் நிறுவனம் அண்டர்டேக் பண்ணியது. அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கோச்சடையான் படத்தை வெளியிடுவதற்கு முன் சுமார் 50 கோடியை ஈராஸ் நிறுவனத்துக்கு ரஜினி திருப்பிக் கொடுக்க வேண்டும். 


அப்படி கொடுத்த பிறகு தான் கோச்சடையான் படத்தை ரஜினியால் ரிலீஸ் செய்ய முடியுமாம். தற்போதைய சூழலில் 50 கோடியை தியேட்டர்காரர்களிடமிருந்து அட்வான்ஸ் தொகையாக வாங்கினால்தான் ஈராஸ் நிறுவனத்துக்குக் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும் என தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து அவ்வளவு பெரிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். 


இந்த பிரச்சனைகள் முடியும் பட்சத்தில் தான் கோச்சடையான் அறிவித்த தேதியில் வெளியாகும் எனத்தெரிகிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்