Home  |  திரை உலகம்

எந்திரன், கோச்சடையான் போன்ற படங்களெல்லாம் கமல் நடிக்க வேண்டியது - ரஜினி !!

கோச்சடையான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், தாசரி நாராயணராவ், ராமநாயுடு, மோகன் பாபு, ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது,  


கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ராணா படம் எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கைவிடப்பட்டது. அப்புறம் உடம்பு சரியாகி வந்த பிறகு லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னிடம் வந்து கோச்சடையான் கதையை சொன்னார். 


அதை என் மகளே இயக்குவதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடமாக சவுந்தர்யா சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.


இந்தப் படத்தை 3டியில் பத்து நிமிடங்கள் பார்த்தேன் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது படம். ஒரு ரசிகனா அனிமேஷன் படம் என்பதையே மறந்து ரசித்து பார்த்தேன். 


பொதுவாக உயிரோடு இல்லாதவங்களைத்தான் அனிமேஷன் படமாக எடுப்பார்கள். 


நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் கதையும், விறுவிறுப்பும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது. 


எனக்கு சினிமா டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. அதை தெரிந்தவர் கமல்தான். எந்திரன், கோச்சடையான் படங்கள் கமல் நடிக்க வேண்டியது. டெக்னாலஜி தெரியாத நான் நடிக்க நேர்ந்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என ரஜினி பேசினார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்