Home  |  ஆரோக்கியம்

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்(Medicinal properties of Moringa leaves)

1.முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்

2.மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.

3.எந்த கீரையானாலும், அவற்றைக் கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

4.பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிட வேண்டும்.

5.பருப்பு வேகவைத்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவை அதிகமாகும்.

6.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

7.மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

8.முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுப்பெறும்.

9.மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி பூரண குணமாகும்.

10.முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும்.

11.கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது.

12.முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!