Home  |  திரை உலகம்

கயல் ( Kaya )

கயல் ( Kaya )

Movie Name: Kayal கயல்
Hero: Chandran
Heroine: Anandhi
Year: 2014
Movie Director: PRABHU SOLOMON
Movie Producer: ESCAPE ARTISTS MOTION PICTURES
Music By: D.IMAAN

ஆறு மாதம் வேலை, மீதி ஆறு மாதம் ஊரைச் சுற்றுவது என்கிற பாலிசியுடன் சுற்றும் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ் பற்றிய வாழ்க்கை ஒருபுறமிருக்க, ஊர் சுற்றும் சமயத்தில் எதிர்பாராமல் ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடிகளை அவர்கள் சந்திக்க நேர்கிறது., உண்மை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்ய, ஓடிப்போகும் பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிறார்கள் இருவரும். அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இவர்கள் கடத்திய கும்பலைச் சார்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து அடிக்கின்றனர், அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல். எந்த தொடர்புமில்லை என அவர்கள் சொல்லியும் நம்ப மறுக்கிறது கும்பல். உண்மையை வரவழைக்க வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை அனுப்புகிறார்கள்.

அதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப் பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொன்ன ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் வருகிறது. பெண்ணைக் காணாமல் கொலைவெறியில் திரியும் அந்தக் கும்பலிடமே கயலை பிடித்திருப்பதாக சொல்கிறான் ஆரோன். இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அச்சமயம் பார்த்து ஓடிப்போன பெண் திரும்பவர,, அவனை விட்டுவிடுகிறார்கள்.இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னாள் தைரியமாக தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்ப ஆரம்பிக்கிறது. காதல் வலியால் துடிப்பவளை, காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள்.

கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத்தேட.. இறுதியில் அவர்கள் இணைந்தார்களா...?என்பது மீதிக்கதை. ஆரோனாக சந்திரன், கயலாக ஆனந்தி. கயல் மட்டும் கண் ( கண் )களில் நிறைகிறார். இவளின் கண்களை பார்த்தால் யாருக்குதான் காதல் வராது. தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் அழகோ அழகு.

நிறைய வசனங்கள் தெளிவாக இல்லை. ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். ஆரோன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதன் பின்னணியை அவனது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது, அதேப்போல் ஆரோனும் சாக்ரடிசும் ஒருவர் பெயரை மற்றொருவருக்கு இனிஷியலாக வைத்துக் கொள்வது புது விளக்கம். படத்தில் பலம் கடைசி 15 நிமிடம். சுனாமியை தத்ரூபமாக கொண்டு, தசாவதாரம் படத்தில் சுனாமி காட்சிகளை இதில் அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். சில குளோசப் கட்சிகள் பயமுறுத்தல். ஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் இயக்குனர் அதே கதைதான். சுனாமி மற்றும் ஆனந்திக்காகவும் படம் பார்க்கலாம்.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை