Home  |  திரை உலகம்

தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா கத்தி !!

பல தடைகளை தாண்டி கத்தி திரைப்படம் வரும் தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கிறது. 


துப்பாக்கி படத்தை அடுத்து, விஜய், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் அடுத்த படம் இதுவாகும். 


இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படபிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதால், இறுதி கட்ட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. 


இதற்கிடையே தியேட்டர் பிடிக்கிற வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஷங்கரின் ஐ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பதால், கத்தி படத்திற்கு இருந்த மிகப் பெரிய போட்டி நீங்கி விட்டது. இந்நிலையில், விஷாலின் பூஜை படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான சில மெகா தியேட்டர்களை இழுத்துக்கொண்டிருக்கிறது.


இருப்பினும், வியாபார ரீதியாக விஜய் படமா? விஷால் படமா? என்று பார்க்கிறபோது விஜய் படமே எகிறி நிற்கும் என்பதால் கத்தி படத்தை வாங்குவதற்குதான் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரியப்படுகிறார்களாம். 


நிலைமை இப்படி இருக்க, தீபாவளிக்கு திரைக்கு வருகிற அத்தனை படங்களுமே ஒரே நாளில் தியேட்டர்களுக்கு முண்டியடிக்க வேண்டாம் என்று, இப்போது விஜய் படத்தை தீபாவளிக்கு 4 நாளைக்கு முன்பே அதாவது அக்டோபர் 18 ம் தேதியே படத்தை வெளியிடும் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறதாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்