Home  |  திரை உலகம்

கேரளாவில் சாதனை படைக்க காத்திருக்கும் கத்தி !!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள படம் கத்தி. 


வரும் தீபாவளியை ஒட்டி வெளிவர இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் கூடிக்கொண்டே செல்கிறது. 


ஷங்கரின் ஐ படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்தவுடன் பலரின் பார்வை தற்போது கத்தி படத்தின் மீது திரும்பியுள்ளது.


அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து, கத்தி படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிப்பதால் விஜய் ரசிகர்களும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  


படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்புடன் நடந்து வருகிறதாம். 


கேரளாவில் கத்தி படத்தைத் திரையிட பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே விஜய் நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. 


அதனால்தான் ஜில்லா படத்தில் கூட மலையாள நடிகரான மோகன்லாலை நடிக்க வைத்தார்கள். தற்போது கத்தி படத்தை கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 


இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லையாம். இது ஒரு புதிய சாதனையாகும். 


ஒரு தமிழ்ப் படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது மலையாளத் திரையுலகில் உள்ளவர்களுக்கும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். 


நல்லவேளை ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகி இருந்தால்... கேரளாவில் ஒரு மலையாளப் படத்தைக் கூட பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் மலையாள திரையுலகினர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்