Home  |  ஆரோக்கியம்

கறிவேப்பிலை - கொஞ்சம் படிங்க பாஸ்!!

கறிவேப்பிலை - கொஞ்சம் படிங்க பாஸ்!!

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.௩

 

கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி,சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல அரைத்தால் போதும். அடிக்கடி இத்துவையலை சாதத்துடன் கலந்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்

 

முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணை (அ) நல்லெண்ணையில் ஊறவைத்து தலையில் தேய்க்கவும்.

 

கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்த சாப்பிடக் கொடுத்து விடவேண்டும்.


இவ்வாறு புத்தி சுவாதினம் அடையும் வரை கொடுத்து வரவேண்டும். புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு
பயன்படும்.


தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.

 

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிடவேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்


தாளிப்பில் போடும் கொசுறு கருவேப்பிலை, ரசம் குழம்பு சாப்பிடும் போது தூக்கி எறியாமல் அதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளற உதவும்.


இந்த டிப்ஸ் அனைத்தும் படித்ததில் கிடைத்தவை இதனால் ஏற்படும் இன்னல்களுக்கு நமது இணையம் பொறுப்பேற்காது....

  12 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!