Home  |  அறுசுவை

காராமணி மசாலா (Karamani Spices)

தேவையானவை :

 

காராமணி - 1 கப்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)

தக்காளி - 1  (நறுக்கியது)

உப்பு,எண்ணைய் - தேவைகேற்ப

காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன் 

ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்

தனியாதூள் 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

 

அரைக்க தேவையானவை :

 

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

கசகசா - 1 டீஸ்பூன்

 

 

தாளிக்க தேவையானவை :

 

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 2

சோம்பு - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.ஒரு வாணலியில் காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து மிக்ஸ்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

 

2.ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து  கொதிக்கவைக்கவேண்டும்.அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

Karamani Spices

Ingredients for Karamani Spices :

 

Karamani - 1 Cup,

Onion - 1 (Chopped),

 Potatoes - 2 (Chopped),

Tomato - 1 (Chopped) ,

Salt , Oil - as needed,

Kashmir Chilly Powder - 1/2 Tsp,

Amsoor Powder - 1/2 Tsp,

Coriander Powder - 1/2 Tsp,

Ginger Garlic Paste - 1 Tsp.

 

Ingredients for Grinding :

 

Grated Coconut - 1 Tbsp,

Cumin - 1 Tsp,

Red Chilies - 2,

Poppy Seeds - 1 Tsp,

 

Ingredients for Seasoning :

 

Cinnamon - 1 Piece,

Cloves - 2 ,

Aniseeds - 1 Tsp.

 

Method to make Karamani Spices :

 

1. Heat the frying pan and add karamani and allow it fry well then add 2 cups of water along with them and boil it for some minutes. After it boiled filter the water and keep the cooked karamani aside. Grind the ingredients which are given for grind. First fry them in a pan and grind it like a paste.

2. Heat oil in a frying pan then season the ingredients which are given above. Then add chopped onions and allow it fry till it gets golden color. Then add ginger garlic paste along with them. Fry it well. Then add the cooked poatato, tomatoes and cooked karamani, salt and water along with them. Then add kasnmir chilly powder, coriander powder, amsoor powder, grinded paste. Allow it boil well and turn off the stove.

 

Karamani Spices is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!