Home  |  திரை உலகம்

கல்யாண சமையல் சாதம் ( Kalyana Samayal Saadham)

கல்யாண சமையல் சாதம் ( Kalyana Samayal Saadham)

Movie Name: Kalyana Samayal Saadham கல்யாண சமையல் சாதம்
Hero: PRASANNA
Heroine: Lekha Washington
Year: 2013
Movie Director: RS Prasanna
Movie Producer: EVEREST FILMS
Music By: Arrora


ஹீரோ பிரசன்னாவுக்கும், ஹீரோயின் லேகாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.. ஆனால் கல்யாணம் 8 மாதங்கள் கழித்துதான்..! இடைப்பட்ட காலத்தில் பொண்ணும், மாப்பிள்ளையும் இணைய ஊடகங்கள் வழியாகவும், நேரிலும் சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் ஹீரோயினின் பார்த்தடே பார்ட்டியில் இருவரும் குடித்துவிட்டு நாளைய கணவர்தானே என்று நாயகியும்.. நாளைய மனைவிதானே என்று நாயகனும் விரும்பி இணைந்து கட்டிலுக்குப் போக.. திடீரென்று நாயகனுக்கு 'முடியாத' நிலை ஏற்படுகிறது.. அப்போதைக்கு அதனை ஈஸியாக எடுத்துக் கொள்கிறார் நாயகி. ஹீரோ தனக்கு ஏதோ பிரச்சினை என்றெண்ணி சித்த மருத்துவர்கள், ஜோதிடர்கள். அலோபதி மருத்துவர்கள்.. கடைசியா மனநிலை மருத்துவர்வரைக்கும் முயல்கிறார். இடையில் 'இந்த' விஷயம் வருங்கால மாமனாருக்கே தெரியவந்து அவரும் வந்து அட்வைஸ் செய்கிறார்.

திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் சின்ன பிரச்சினையை பெரிசாக்கும் அளவுக்கு பிரச்சினைகளும் தொடர்கின்றன. இதையெல்லாம் கடந்து எப்படி அவர்களது திருமணம் கல்யாணத்தில் முடிகிறது என்பதுதான் படம். பிரசன்னாவின் வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் பெண் பார்க்க வரும் முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அந்த ஸ்டைலிஸ் நடிப்பு மிகையில்லமல் பார்த்துக் கொள்கிறார். பிரசன்னாவின் இடம் அப்படியேதான் இருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. ஹீரோயின் முகம் இல்லையென்றாலும், சின்னச் சின்ன ஷாட்டுகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறார். பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிரசன்னாவிடம் கண்ணாலேயே பேசுவது.. கெஞ்சுவது.. மிரட்டுவது என்று வரும்கால கணவர்களுக்குப் பிடித்தமான வகையில் இவரது நடிப்பு சூப்பர்.

டெல்லிகணேஷ், உமா பத்மநாபன், கீதா ரவிசங்கர், உஷா, காத்தாடி ராமமூர்த்தி, நானு என்று படத்தில் அத்தனையும் அய்யர்கள்தான். குலதெய்வம் கோவிலில் திருமணம் என்று சென்ற பிறகும்கூட அங்கேயும் வேறாள் யாரையும்என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். உமா பத்மநாபனின் சிடுசிடு முகமும், அந்த வேக நடிப்பும்தான் ரொம்ப அழகு. டெல்லி கணேஷ் ஹிண்டு பேப்பருக்கு நடுவில் நடிகைகளின் போட்டோவை வைத்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ஒண்ணும் தெரியாத அப்பாவி பிராமின். இதையே கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்து கடைசியாக ஒரு நாய்க்குட்டியே இப்போதைக்கு துணை என்ற ரீதியில் இருப்பவராகக் காட்டியிருப்பதுசூப்பர். இந்தப் படம் காமெடி படமல்ல.. ஆனாலும் காமெடிதான் கொண்டு வந்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் பேஸ்புக்கின் பக்கங்களை வைத்தும்.. புகைப்படங்களை வைத்தும் வித்தியாசப்படுத்தியிருப்பது அழகு.இரட்டை அர்த்த வசனங்கள்தான் படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

தனியாக மட்டும் சாப்பிடுங்கள்......

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்