Home  |  திரை உலகம்

கலவரம் ( Kalavaram )

கலவரம் ( Kalavaram )

Movie Name: Kalavaram கலவரம்
Hero: SATHYARAJ
Year: 2014
Movie Director: Ramesh Selvan
Movie Producer: Rithish Harish Movies
Music By: FS Faizal


மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனி ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது. தணிகாலபரணி என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார். அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர்.

குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார். கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார்.
இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து வந்துவிடுகிறார்.

இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார். போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார். வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்