Home  |  திரை உலகம்

கலகலப்பு 2 ரெடியாக போகுதாம் !!

சுந்தர்.சி இயக்கத்தில், விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு காமெடி விருந்து படைத்த படம் கலகலப்பு. இந்த படம் சுந்தர்.சிக்கு வெற்றியை கொடுத்ததால் அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. அதோடு, அதில் நடித்திருந்தவர்களுக்கும் புதிய படவாய்ப்புகள் பெருகின.

 

இதை அடுத்து மதகஜராஜா, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களை இயக்கிய சுந்தர்.சி., இப்போது அரண்மனை என்ற படத்தை இயக்கி கதா நாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன்பிறகு கலகலப்பு படத்தின் இரண்டாம பாகத்தை இயக்குகிறாராம். அந்த படத்தில் மிர்சி சிவா நடிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டதாம். மற்ற நடிகர், நடிகைகளில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரங்கள் அரண்மனை முடிந்ததும் வெளியாகுமாம். 

 

கலகலப்புக்கு பிறகு சிவா நடித்த, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால், கலகலப்பு-2 படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் சிவா.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்