Home  |  திரை உலகம்

காதலை தவிர வேறொன்றும் இல்லை ( Kadhalai Thavira Verondrum Illai )

காதலை தவிர வேறொன்றும் இல்லை ( Kadhalai Thavira Verondrum Illai )

Movie Name: Kadhalai Thavira Verondrum Illai காதலை தவிர வேறொன்றும் இல்லை
Hero: Yuvan Firose Khan
Heroine: SARANYA MOHAN
Year: 2014
Movie Director: K.SELVA BHARATHY
Movie Producer: Chen Movies
Music By: SRIKANTH DEVA


அன்புவின் அக்கா ஒருவரை காதலித்து ஊரைவிட்டு ஓடியதால், அவமானம் தாங்கமுடியாத அவரது குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. இதனால் சிறுவயதிலேயே காதல் என்றால் பிடிக்காமல் வளர்ந்து வருகிறார் அன்பு. பெரியவனானதும் பத்திரிகை ஒன்றில் வேலை பார்க்கும் அன்பு, காதலர் தினத்தன்று கடற்கரையில் நெருக்கமாக அமர்ந்துகொண்டிருக்கும் காதல் ஜோடிகளை படம்பிடித்து பத்திரிகையில் வெளியிடுகிறார். இதனை பார்த்த காதல் ஜோடிகள் தங்கள் புகைப்படம் பத்திரிகையில் வெளிவர காரணமாக இருந்த அன்புமீது வெறுப்பு கொள்கின்றனர்.

இதனால் இவர் தங்கியிருக்கும் வீட்டிலும் பிரச்சினை வருவதால் அன்புவை வீட்டை விட்டு காலி செய்கிறார் வீட்டின் உரிமையாளர். தனது மாமாவான லாரன்ஸ் மாஸ்டர் (இமான் அண்ணாச்சி) வீட்டில் போய் தங்குகிறார். டியூசன் மாஸ்டரான இவரது வீட்டுக்கு அருகிலேயே நாயகி கமலி (சரண்யா மோகன்) வசித்து வருகிறார். அன்புவால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருத்தியின் தோழியும் இதே டியூசனில் படித்து வருகிறாள். அவள் தனது தோழிக்கு ஏற்பட்ட அவமானத்தை ஈடுகட்டும் விதமாக அன்புவை பழிவாங்க நினைக்கிறாள். இதனால் அன்புவின் செல்போனை எடுத்து, தன்னுடைய செல்போனுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிக் கொள்கிறாள்.

பின்னர், அவளே போலீசுக்கு போன் செய்து புகாரும் செய்துவிடுகிறாள். உடனே, போலீசார் அன்பு வீட்டுக்கு வந்து விசாரணை செய்கிறார்கள். அப்போது, அன்பு மொபைலில் இருந்து இவளுக்கு செய்தி அனுப்பப்பட்டது தெரிய வருகிறது. உடனே, போலீசார் அன்புவை கைது செய்ய முயற்சிக்கும் வேளையில், அவளாகவே தான்தான் அந்த செய்தியை அன்புவின் செல்போனில் இருந்து அனுப்பினேன் என்று ஒத்துக் கொள்கிறாள். உடனே, அன்பு அவளிடம் தான் காதலை வெறுப்பதற்கான காரணத்தை விளக்குகிறான். காதலால் தனது குடும்பமே சீரழிந்துபோனதை அவளிடம் விளக்கிக் கூறுவதை கேட்டுக் கொண்டிருக்கும் நாயகி கமலி அப்போதிலிருந்து அவனை காதலிக்க தொடங்குகிறாள். இமான் அண்ணாச்சி படம் முழுக்க பேசிக்கொண்டே வருவதால் சலிப்பையே ஏற்படுத்துகிறது.

படத்தில் தலைமையாசிரியராக வரும் இயக்குர் செல்வபாரதியின் நடிப்பு சொல்லும்படியாக இல்லை. படம் முழுக்க சிறுவர்களை வைத்தை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கே.செல்வபாரதி. ஆனால், அவற்றையெல்லாம் ரசிக்கும்படி செய்யத் தவறியிருக்கிறார். படத்தில் போலீசிடம் மாணவன் ஒருவன் வாக்குமூலம் கொடுக்கும் காட்சி மட்டும்தான் ரசிக்கும்படி இருக்கிறது. 5 நிமிடம் ஓடும் இந்த காட்சி சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்வதாக அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பூபதியின் ஒளிப்பதிவு கண்ணுக்கு எரிச்சலை தருகிறது.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்