Home  |  அறுசுவை

கதம்ப சாம்பார் (Kadamba Sambar)

தேவையானவை :

 

துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

பீன்ஸ் - 10 (நறுக்கியது)

காரட் - 2 (நறுக்கியது)

முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)

கத்தரிக்காய் - 2 (நறுக்கியது)

பெருங்காயம் - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

தனியா - ஒரு டீஸ்பூன்

அவரைக்காய் - 10

பூசனிக்காய் - ஒரு பீஸ்

சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

புளிகரைசல் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 4

 

 

செய்முறை :

 

1.முதலில் குக்கரில் பருப்பை போதுமான நீர் விட்டு  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.நறுக்கிய காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள் சிறிது சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் நறுக்கின தக்காளிப் பழம் சிறிது நேரம் வதக்கி, அத்துடன் வேக வைத்த காய்கறிகள், புளி கரைசல், நீரில் கரைத்த மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, பருப்பு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

3.குழம்பு கொதிக்கும் பச்சை மிளகாய்களை கீறிப் போடவும். குழம்பு நன்கு கொதித்ததும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.சாம்பாரை இறக்குவதற்கு முன் வெந்தயம், தனியாவை சிவக்க வறுத்து, கடைசியில் சீரகம் சேர்த்து இலேசாக வறுத்து மூன்றையும் நைசாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை சாம்பாரை இறக்கியதும் அதில் தூவவும். நறுக்கிய கொத்துமல்லித்தழையையும் தூவி கிளறிவிடவும்.

Kadamba Sambar

Ingredients for Kadamba Sambar:

 

Red Gram-2 tbsp

Beans-10 (Chopped)

Carrot-2 (Chopped)

Drumstick-2 (Chopped)

Brinjal-2 (Chopped)

Asafoetida-Little

Chilly Powder-4 tsp

Turmeric Powder-1/2 tsp

Mustard-1/2 tsp

Cumin-1/2 tsp

Fenugreek-1/2 tsp

Coriander-1 tsp

Broad Beans-10

Ash Gourd-1 Piece

Small Onion-1 Cup (Chopped)

Tomato-3 (Chopped)

Tamarind Juice-1 Cup

Green Chilly-4

 

Procedure to make Kadamba Sambar:

 

1. In a cooker, add dhal along with water and boil well and keep aside. Then boil the chopped vegetables along with salt and turmeric powder.

2. Heat oil in a vessel, add mustard,asafoetida and let to splutter and then add onion, curry leaves and saute till get golden color. Then add chopped tomatoes, boiled vegetables, tamarind juice, chilly powder, turmeric powder, salt, dhal water and allow to boil well.

3. When starts boiling, add peeled green chilly. Then add mashed dhal. Fry fenugreek, coriander and cumin and grind them. Put this grinded powder over the sambar. Finally garnish with coriander leaves and stir well.

 

 

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!