Home  |  அறுசுவை

கடாய் வெஜிடபிள் (Kadai Vegetable)

தேவையானவை :

 

உருளைக்கிழங்கு - 4 (நறுக்கியது)

குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

கேரட் - 4 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

சீரகம் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

சீரகப்பொடி - 1 ஸ்பூன்

மல்லிப்பொடி - 1 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 3

கொத்தமல்லி தழை- சிறிதளவு

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - சிறிதளவு

பூண்டு - 5 பல்

மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 1 ஸ்பூன்

மிளகுப்பொடி - 1/2 ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில்  மிக்ஸியில், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் நெய், நல்லெண்ணெய் ஊற்றி அதில், சீரகம் தாளித்து, பின் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு நன்றாக வதக்கவும். இதன் மேல், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

 

2.வதக்கும்போதே சீரகப்பொடி, மஞ்சள் தூள், மிளகுப்பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி இவற்றை, கொடுத்துள்ள அளவில் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்கு வதங்கிய பின், நான்கு டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தபின் தேவைகேற்ப உப்பு போடவும்.நறுக்கி வைத்த காய்களைப் போட்டு நன்கு கிளறி, பத்து நிமிடம் வாணலியை மூடிவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

 

3.காய்கள் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். இதன் மேல் சூடான நெய் ஒரு ஸ்பூன் கலக்கவும். கடாய் வெஜிடபிள் தயார்.

Kadai Vegetable

Ingredients for Kadai Vegetable :


Potato - 4 (Chopped),

Capsicum - 1 (Chopped),

Carrot - 4 (Chopped),

Tomato - 3 (Chopped),

Cumin - 1/2 Spoon,

Salt - as needed, 

Cumin Powder - 1 Spoon, 

Coriander Powder - 1 Spoon ,

Large Onion - 3,

Coriander Leaves - Little,

Green Chilies - 2,

Ginger - Little,

Garlic - 5 Cloves,

Turmeric Powder - 1/4 Spoon,

Ghee - 2 Spoons,

Gingly Oil - 2 Spoons,

Chilli Powder - 1 Spoon,

Pepper Powder - 1/2 Spoon.


Method to make Kadai Vegetable :


1. First grind the half amount of chopped onions, ginger, garlic, green chilies all together. Grind it softly. Heat ghee and gingly oil in a frying pan then add cumin and season it. Then add ground paste and fry it well. Then add chopped onions and tomatoes along with themand allow it to fry well.

2. Then add cumin powder, turmeric powder, coriander powder, chilli powder along with them and fry it well. After it boiled well then add 4 glasses of water and add some salt. Then add chopped vegetables and closed the pan. Then allow it to boil for 10 minutes in a low flame.

3. After vegetables get boiled then add coriander leaves and add heated ghee 1 spoon and stir it well. 


Kadai Vegetable is ready to eat.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!