Home  |  திரை உலகம்

காவிய தலைவன் ( Kaaviya Thalaivan )

காவிய தலைவன் ( Kaaviya Thalaivan )

Movie Name: Kaaviya Thalaivan காவிய தலைவன்
Hero: PRITHVIRAJ
Heroine: VEDHIKA
Year: 2014
Movie Director: VASANTHABALAN
Music By: A.R.RAHMAN


சித்தார்த் தன் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். ப்ரித்விராஜ் மிகப்பெரிய அளவிற்கு நன்றாக நடித்திருக்கிறார். நாசரும், பொன்வன்னன்னும் நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் நடிப்பு. ஜமீன் இளவரசியாக அனைகா சோட்டி இயக்குனர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அந்த நடிப்பு தாராளமாக போதும். குடிகார கான்ட்ராக்டராக 'மன்சூர் அலி கான் நடிப்பும் நன்று. வடிவாம்பாளாக வேதிகாவிற்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம், பின்னணி இசையை விட பாடல்கள் "ஏ சண்டி குதிர" பாடல் துள்ளல் இசை,

புராண நாடகங்களில் நடித்து கொண்டிருக்கும் வேதிகா சித்தார்த்திடம் தன் நடிப்பு பற்றி கேட்கும் போது ,அழகா இருக்க எங்க நடிச்ச!!?? என்கிறார் சித்தார்த். சுதேசி நாடகங்களில் நடிக்கையில் வேதிகாவிடம், அழகா இருக்க,.. அந்த அழகோட உன் நடிப்பும் சேரும் போது.. என்று புகழ்ந்துள்ளார். பாடல்களை பின்னணியில் முகபாவனைகளை காட்டிவிட்டு 'அவர் அந்த நாடகத்தில் அப்படி நடித்தார் இந்த நாடகத்தில் இப்படி நடித்தார்' வசனங்களாகவே வைத்ததால் உணர்வுகள் புரியும்படி இல்லை.

சித்தார்த்தை ப்ரித்விராஜை விட திறமையில் உயர்வாக காட்ட இயக்குனர் கஷ்டப்பட்டிருக்கிறார். இருந்தாலும் ப்ரித்விராஜின் நடிப்பு அனைவரையும் காட்டிலும் மேல். ப்ரித்விராஜ் சற்று நெகடிவ் குணாதிசியங்களை கொண்டிருந்தாலும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கோமதி ( ப்ரித்விராஜ் ) செய்யும் அனைத்தும் சரிதான் எனப்படுகிறது. எவ்வளவு உண்மை, நேர்மை, திறமைகள் இருந்தும் நேற்று வந்த காளி ( சித்தார்த் ) இவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் பறித்து கொண்டு செல்கிறான், அதுமட்டுமின்றி காதலும் நேசமும் மரியாதையும் வைத்து பல வருடங்கள் அடைக்கலம் கொடுத்த வடிவாம்பாள் ( வேதிகா ) கூட காளியே வேண்டும் என்கிறாள். காளி ஏற்கனவே ஒரு இளவரசியுடன் காதல் கொண்டு " எல்லாம் " முடித்துவிட்டு பிறகு தவறுகளுக்கு குரு சொல்லிற்கு மரியாதையை கொடுக்கிறேன் என அவளை கை விட்டு வருகிறான். துயரம் தாங்காமல் வயிற்றில் ஒரு மாத குழந்தையுடன் அவள் இறந்து போகிறாள்.

அந்த வருத்தத்தை இவன் குரு மீது கோபமாக காட்ட, குருவிற்கே சாபம் இட அதிர்ச்சியிலும் குற்ற உணர்ச்சியிலும் குரு மரணம் அடைகிறார். பின்னணி இசை கைகொடுக்கவில்லை, கதையும் புரிந்தும் புரியாமல் செல்கிறது. புதிய முயற்சிக்கு சபாஷ். ஒளிப்பதிவு சூப்பர். எழுத்தாளார் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
பார்க்கலாம்....ஆனால் பொறுமை அவசியம்.

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்