Home  |  திரை உலகம்

காதல் சொல்ல நேரம் இல்லை !!

காதல் சொல்ல நேரம் இல்லை !!

நடிகர் - உதயகுமார்


நடிகை - இனியா

இயக்குனர் - ஸ்ரீநிவாசன்

இசை - குமார் பாண்டியன்

ஒளிபதிவு - ராஜ்குமார்


காதல் சொல்ல நேரமில்லை படமானது ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ், மற்றும் ஸ்ரீசினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிற படம் .

இதில் நடிகர் உதயகுமார் புதுமுகம் , இவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடிக்கிறார்.

இவர்களுடன் காமெடி பீஸ் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.


இந்த கதையை பொறுத்த மட்டில் இது ஒரு பிளே பாய் கதையாம் .
சில பேர் தங்களை அழகனாவும், மன்மதனாகவும் நினைத்துக் கொண்டு பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். முடியாவிட்டாலும் வீழ்த்தி விட்டதாக பெருமையாக சொல்லிக் கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்ட பிளே பாய் குணம் படைத்த ஒருவன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறான். அவனை ஒரு பெண் எப்படி மீட்கிறாள். அதன் பிறகு அவன் பெண்ணின் பெருமையை எப்படி உணர்கிறான் என்கிற கணக்கில் கதை நகர்கிறதாம் .

சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார்கள் இந்த காதல் சொல்ல நேரம் இல்லை டீம். மேலும் இந்த படத்தில் விரசம் இல்லாமல் கதை நகர்த்தி இருக்கிறார்கள். எப்படியோ கதை நல்லா நடந்தால் சரி.....படம் ஓடினால் சரி....

  04 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்